
டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு பிரதமரின் பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை
July 05th, 09:02 am
டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜூலை 3 முதல் 4, 2025 வரை அந்நாட்டுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் டொபாகோ பிரதமருடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 04th, 11:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள ரெட் ஹவுஸில் டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸரை சந்தித்தார். சமீபத்திய தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். தமக்கு அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஏற்பட்ட முக்கிய பலன்கள்: பிரதமரின் டிரினிடாட் & டொபாகோ பயணம்
July 04th, 11:41 pm
மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் , இந்தி மற்றும் இந்திய ஆய்வுகளுக்கான இரண்டு ஐசிசிஆர் இருக்கைகளை மீண்டும் நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.Prime Minister meets with the President of Trinidad and Tobago
July 04th, 11:37 pm
PM Modi met Trinidad & Tobago President Kangaloo and the two leaders reflected on the enduring bonds shared by the two countries, anchored by strong people-to-people ties. PM Modi conveyed his sincere gratitude for the conferment of the ‘Order of the Republic of Trinidad and Tobago’—describing it as an honour for the 1.4 billion people of India.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.PM Modi conferred with highest national award, the ‘Order of the Republic of Trinidad & Tobago
July 04th, 08:20 pm
PM Modi was conferred Trinidad & Tobago’s highest national honour — The Order of the Republic of Trinidad & Tobago — at a special ceremony in Port of Spain. He dedicated the award to the 1.4 billion Indians and the historic bonds of friendship between the two nations, rooted in shared heritage. PM Modi also reaffirmed his commitment to strengthening bilateral ties.டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி. கமலா பெர்சாத்-பிஸ்ஸசார் வழங்கிய பாரம்பரிய இரவு விருந்தில் பிரதமர் பங்கேற்பு
July 04th, 09:45 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி. கமலா பெர்சாத்-பிஸ்ஸசார் வழங்கிய பாரம்பரிய இரவு விருந்தில் கலந்து கொண்டார். அந்நாட்டுப் பிரதமர் ஏற்பாடு செய்திருந்த இந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, சோஹாரி இலையில் உணவு பரிமாறப்பட்டது. இது டிரினிடாட் & டொபாகோ மக்களுக்கு, குறிப்பாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மக்களுக்கு மிகவும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.பிரதமர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த பாடகர் திரு. ராணா மோஹிப்பை சந்தித்துப் பேசினார்
July 04th, 09:42 am
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரவு விருந்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டங்களின் போது ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடலைப் பாடிய டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த பாடகர் திரு. ராணா மோஹிப்பைச் சந்தித்தார்.போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போஜ்புரி சௌதால் நிகழ்ச்சிக்கு பிரதமர் பாராட்டு
July 04th, 09:06 am
இந்தியா - டிரினிடாட் & டொபாகோ நாடுகளிடையயே நீடித்த கலாச்சார பிணைப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற சிறப்பான போஜ்புரி சௌதால் நிகழ்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.டிரினிடாட் & டொபாகோவில் இந்தியாவை அறிந்துகொள்ளுங்கள் விநாடி-வினா போட்டி வெற்றியாளர்களுடன் பிரதமர் சந்திப்பு
July 04th, 09:03 am
டிரினிடாட் & டொபாகோவில் நடந்த (இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள்) விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்ற சங்கர் ராம்ஜட்டன், நிக்கோலஸ் மராஜ் மற்றும் வின்ஸ் மஹாடோ ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமருக்கு ராமர் கோயிலின் மாதிரி வடிவம் மற்றும் புனித நீரை வழங்கினார்
July 04th, 08:57 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, டிரினிடாட் & டொபாகோ நாட்டின் பிரதமர் திருமதி கமலா பெர்சாத் - பிஸ்ஸேசருக்கு, அவர் அளித்த இரவு விருந்தின் போது, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் சிறிய அளவிலான மாதிரியை வழங்கினார். மேலும் அவருக்கு, சரயு நதி மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரையும் வழங்கினார்.டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
July 04th, 05:56 am
இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் உரையாற்றினார்
July 04th, 04:40 am
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டுக் குடியரசின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை இந்திய வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றதுடன், இந்தோ-டிரினிடாடியன் பாரம்பரிய முறைப்படி வண்ணமயமான வரவேற்பும் அளித்தனர்.டிரினிடாட் மற்றும் டொபாகோவில் அரசுமுறைப் பயணத்தில் பிரதமர் போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்து சேர்ந்தார்
July 04th, 02:16 am
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 2025, ஜூலை 3,4, தேதிகளில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்து சேர்ந்தார். 1999-க்குப் பின் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் இருதரப்புப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவின் சிறப்பு அடையாளமாக, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்திற்கு பிரதமர் வருகைதந்தபோது, டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாட்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை சகாக்களுடனும் பல பிரமுகர்களுடனும் வந்திருந்து அவரை வரவேற்றார். பிரதமருக்குப் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை மற்றும் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.