கங்கா தலாவோவிற்கு பிரதமர் பயணம்
March 12th, 05:26 pm
மொரீஷியஸில் உள்ள புனித கங்கா தலாவோவிற்கு சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு பிரார்த்தனை செய்தார். அத்துடன் இந்தியாவின் திரிவேணி சங்கமத்தில் இருந்து கொண்டு வந்த புனித நீரை புனித தலத்தில் கலந்தார்.மொரீஷியஸில் அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இணைந்து தொடங்கி வைத்தனர்
March 12th, 03:13 pm
மொரீஷியஸ் நாட்டின் ரிடூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இன்று கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இந்தியா-மொரீஷியஸ் மேம்பாட்டு கூட்டாண்மையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த முக்கிய திட்டம், மொரீஷியஸில் திறன் மேம்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய சிவில் விருது வழங்கப்பட்டது
March 12th, 03:12 pm
மொரீஷியஸ் குடியரசின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஷன் விருதினை ஏற்றுக் கொண்டு பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 03:00 pm
மொரீஷியஸின் மிக உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது கௌரவம் மட்டுமல்ல, இது 140 கோடி இந்தியர்களின் கௌரவம் ஆகும். இந்தியா-மொரீஷியஸ் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, வரலாற்று ரீதியிலான நல்லுறவுக்கு இந்த விருது மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இவ்விரு நாடுகளின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. உலக அளவில் தென் பகுதியில் உள்ள நாடுகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின் அடையாளமாகவும் இந்த விருது திகழ்கிறது. இந்த விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் நாட்டுக்கு வந்து வசித்து வரும் மூதாதையர்களும், அவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். தங்கள் கடின உழைப்பின் மூலம், மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதி, அதன் பன்முகத்தன்மைக்கு அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த கௌரவத்தை ஒரு பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா-மொரீஷியஸ் இடையே நல்லுறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று எங்களது நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.இந்தியா-மொரீஷியஸ் இடையே மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்கு பார்வை
March 12th, 02:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸூக்கு 2025 மார்ச் 11 முதல் 12 வரை மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலமும், திரு நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான, ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்பிரதமரின் மொரீஷியஸ் பயணம்: ஒப்பந்தங்களின் பட்டியல்
March 12th, 01:56 pm
எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களை (இந்திய ரூபாய் அல்லது மொரீஷியஸ் ரூபாய்) பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மொரீஷியஸ் வங்கி இடையே ஒப்பந்தம்.இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை
March 12th, 12:30 pm
மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி 140 கோடி இந்திய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய தினத்தையொட்டி மொரீஷியஸ் நாட்டிற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த வாய்ப்பளித்த பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களுக்கும், மொரீஷியஸ் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 12th, 09:58 am
மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொண்டாட்டங்களில் பங்கேற்பது உட்பட இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று திரு மோடி கூறினார். நேற்றைய முக்கிய கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்களையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.மொரீஷியஸ் பிரதமர் அளித்த இரவு விருந்தில் பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 06:15 am
முதலாவதாக, பிரதமரின் உணர்ச்சிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் எண்ணங்களுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மொரீஷியஸ் பிரதமருக்கும், அரசு மற்றும் அதன் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மொரீஷியஸ் பயணம் என்பது ஒரு இந்தியப் பிரதமருக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் ராஜாங்க ரீதியான பயணம் மட்டுமல்ல, குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. மொரீஷியஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே இந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் சொந்தம் என்ற உணர்வு உள்ளது. நெறிமுறைகளின் தடைகள் இல்லை. மொரீஷியஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக நான் மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. இந்தத் தருணத்தில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:07 am
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 11th, 07:30 pm
மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.மொரீஷியஸ் குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்
March 11th, 04:01 pm
மொரீஷியஸ் குடியரசு அதிபர் திரு தரம்பீர் கோகுலை அரசு மாளிகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.மொரீஷியஸ் அதிபர் மேன்மைதங்கிய தரம்பீர் கோகுல் அளித்த மதிய விருந்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய சிற்றுரையின் தமிழாக்கம்
March 11th, 03:06 pm
மேன்மைதங்கிய அதிபர் தரம்பீர் கோகுல் அவர்களே,சர் சீவூசாகுர் ராம்கூலம், சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
March 11th, 03:04 pm
பம்பிள்மௌசஸ் தாவரவியல் பூங்காவில் உள்ள சர் சீவூசாகுர் ராம்கூலம் மற்றும் சர் அனிரூத் ஜூக்நாத் ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அப்போது மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் பிரதமருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மொரீஷியஸின் முன்னேற்றம் மற்றும் இந்தியா-மொரீஷியஸ் உறவுகளுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் இரு தலைவர்களின் நீடித்த மரபுகளை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி
March 11th, 08:33 am
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு மொரீஷியஸுக்கு வந்தார். இரண்டு நாள் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்பார், மேலும் மொரீஷியஸ் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்திப்பார்.மொரீஷியஸ் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
March 10th, 06:18 pm
எனது நண்பர் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வதுதேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.மார்ச் 11-12, 2025 அன்று பிரதமர் மோடி மொரீஷியஸுக்கு பயணம் மேற்கொள்கிறார்
March 07th, 06:17 pm
பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமின் அழைப்பின் பேரில், மார்ச் 11-12 அன்று பிரதமர் மோடி மொரீஷியஸுக்குச் சென்று தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். இந்தப் பயணத்தின் போது, அவர் முக்கியத் தலைவர்களைச் சந்திப்பார், இந்திய வம்சாவளி சமூகத்தினரிடம் பேசுவார், மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பார். பகிரப்பட்ட வரலாறு மற்றும் முன்னேற்றத்தில் வேரூன்றிய வலுவான இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.