கூட்டறிக்கை: இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு முறை குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 07:46 pm
குவைத் நாட்டின் அமீரான ஷேக் மெஷல் திரு.அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 டிசம்பர் 21-22 தேதிகளில் குவைத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவர் குவைத் செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 21, 2024 அன்று குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் மேதகு அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் 'கௌரவ விருந்தினராகக்' கலந்து கொண்டார்.குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்
December 22nd, 06:38 pm
இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
December 22nd, 06:03 pm
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.குவைத் அமீரை பிரதமர் சந்தித்தார்
December 22nd, 05:08 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் அமிர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவைச் சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். பயான் அரண்மனையை வந்தடைந்த பிரதமருக்கு , குவைத் பிரதமர் அஹ்மத் அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா சம்பிரதாய முறையில் வரவேற்பு அளித்தார்.குவைத்தின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார் பிரதமர்
December 22nd, 04:37 pm
குவைத்தின் உயரிய தேசிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமருக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவித்தார். குவைத் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்பு
December 21st, 10:24 pm
குவைத் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி குவைத்தில் 26-வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிரம்மாண்டமான தொடக்க விழாவில் குவைத் பிரதமர் மேதகு அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் மேதகு குவைத் பிரதமர் ஆகியோருடன் அவர் இணைந்து கொண்டார். குவைத் தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியாக்கம் செய்த அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டு
December 21st, 07:03 pm
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அப்துல்லா அல்-பரூன், அப்துல் லத்தீப் அல்-நெசெஃப் ஆகியோரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.குவைத்தில் தொழிலாளர் முகாமைப் பிரதமர் பார்வையிட்டார்
December 21st, 07:00 pm
குவைத் பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் திரு நரேந்திர மோடி குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் சுமார் 1500 இந்தியர்கள் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்றார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் நல்வாழ்வு குறித்துக் கேட்டறிந்தார்.குவைத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 21st, 06:34 pm
நான் இரண்டரை மணி நேரத்திற்கு முன்புதான் குவைத் வந்தேன். நான் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து, சுற்றிலும் ஒரு தனித்துவமான சொந்தம் மற்றும் அரவணைப்பை உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ஒரு சிறிய இந்துஸ்தான் எனக்கு முன்னால் உயிர் பெற்று வந்ததைப் போல உணர்கிறேன்.குவைத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
December 21st, 06:30 pm
குவைத் நகரில் உள்ள ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குவைத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாட்டினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.குவைத்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்
December 21st, 06:16 pm
குவைத்தில் உள்ள துடிப்பான இந்திய புலம்பெயர் மக்கள் அளித்த இதயபூர்வமான வரவேற்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்களின் ஆற்றல், அன்பு மற்றும் இந்தியாவுடனான அசைக்க முடியாத தொடர்பு ஆகியவை உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.குவைத் சென்றடைந்தார் பிரதமர் மோடி
December 21st, 03:39 pm
குவைத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை. தனது பயணத்தின் போது, பிரதமர் மோடி அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் குவைத் பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் அவர் இந்திய சமூகத்தினருடன் உரையாடுவார்குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
December 21st, 09:21 am
குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன்.