ஜப்பானின் மியாகி மாகாணத்தின் செண்டாயில் உள்ள செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்

August 30th, 11:52 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் இணைந்து மியாகி மாகாணத்தில் உள்ள செண்டாய்க்குப் பயணம் மேற்கொண்டார். செண்டாயில், இரு தலைவர்களும் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் மியாகி லிமிடெட் (டிஇஎல் மியாகி) நிறுவனத்தைப் பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் டிஇஎல்-ன் பங்கு, அதன் மேம்பட்ட உற்பத்தித் திறன், இந்தியாவுடனான அதன் தற்போதைய, எதிர்கால ஒத்துழைப்புகள் ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி, உற்பத்தி, சோதனை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உருவாக்க இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்ல வாய்ப்புகள் குறித்த நடைமுறை புரிதலை இந்த தொழிற்சாலை பயணம் இரு தலைவர்களுக்கும் வழங்கியது.

ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

August 30th, 08:00 am

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.

ஜப்பான் மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

August 30th, 07:34 am

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பதினாறு ஆளுநர்கள் பங்கேற்றனர்.

இந்தியா-ஜப்பான் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு

August 29th, 08:12 pm

நமது பகிரப்பட்ட மதிப்புகளிலும் பரஸ்பர மரியாதையிலும் உறுதியாக அடித்தளமிடப்பட்டுள்ள இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பாதுகாப்பையும் செழிப்பையும் அதிகரிக்க மிகவும் முக்கியமானது. பொருளாதார பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு என்பது நமது உத்திசார் கண்ணோட்டத்தில் வெளிப்படும் முக்கிய தூணாகும்.

இந்தியா - ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பிரகடனம்

August 29th, 07:43 pm

இந்தியா - ஜப்பான் அரசுகளுக்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார், உலகளாவிய ஒத்துழைப்பின் அரசியல் பார்வையும் நோக்கங்களும் சிறப்பானவை. விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான இரு நாடுகளின் பங்கை இவை எடுத்துக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

அடுத்த பத்தாண்டுகளுக்கான இந்தியா - ஜப்பான் கூட்டு தொலைநோக்கு: சிறப்பு உத்தி மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை வழிநடத்த எட்டு வழிகாட்டுதல்கள்

August 29th, 07:11 pm

சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் சுதந்திரமான, வெளிப்படையான, அமைதியான, வளமான, வற்புறுத்தல் இல்லாத இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. நட்பு மற்றும் பரஸ்பர நல்லெண்ணத்தின் நீண்ட பாரம்பரியத்தையும் பொதுவான தொலைநோக்குப் பார்வையையும் கொண்ட இந்தியாவும் ஜப்பானும், அடுத்த பத்தாண்டுகளில் உள் நாட்டிலும் உலகிலும் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளை கூட்டாக வழிநடத்தவும், அந்தந்த நாட்டு இலக்குகளை அடைய உதவவும், நமது நாடுகளையும் அடுத்த தலைமுறை மக்களையும் முன்னெப்போதையும் விட நெருக்கமாகக் கொண்டுவரவும் எங்கள் நோக்கத்தை இதன் மூலம் வெளிப்படுத்துகிறோம்.

15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை

August 29th, 07:06 pm

ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.

இந்தியா - ஜப்பான் மனிதவள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம்

August 29th, 06:54 pm

2025-ம் ஆண்டு இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின் போது, இந்திய - ஜப்பான் பிரதமர்கள் தேசிய முன்னுரிமைகளை பூர்த்தி செய்வதை ஒப்புக்கொண்டனர்.

பிரதமரின் ஜப்பான் அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்

August 29th, 06:23 pm

பொருளாதார கூட்டாண்மை, பொருளாதாரப் பாதுகாப்பு, இயக்கம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் புதுமை, சுகாதாரம், மக்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஈடுபாடுகள் ஆகிய எட்டு வகை முயற்சிகளில் பொருளாதார மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்புக்கான 10 ஆண்டுகால உத்திசார் முன்னுரிமை

ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸிடமிருந்து பிரதமர் ஒரு தருமா பொம்மையைப் பரிசாகப் பெற்றார்

August 29th, 04:29 pm

ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமை பூசாரி ரெவ் சீஷி ஹிரோஸ், இன்று பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ஒரு தருமா பொம்மையைப் பரிசாக வழங்கினார், இந்தச் சிறப்பு பரிசு இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நெருங்கிய நாகரிக மற்றும் ஆன்மீக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜப்பான் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்

August 29th, 03:59 pm

இன்றைய எங்கள் கலந்துரையாடல், ஆக்கப்பூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்கள் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.

இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 29th, 11:20 am

உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

August 29th, 11:02 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி ஜப்பானின் டோக்கியோவிற்கு வருகை தருகிறார்

August 29th, 06:43 am

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு ஜப்பானுக்கு வருகை தந்தார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவும் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்து, முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள்.

பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

May 21st, 09:49 am

2023 மே 21 அன்று ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே மேன்மை தங்கிய பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

Prime Minister’s visit to the Hiroshima Peace Memorial Museum

May 21st, 07:58 am

Prime Minister Shri Narendra Modi joined other leaders at G-7 Summit in Hiroshima to visit the Peace Memorial Museum. Prime Minister signed the visitor’s book in the Museum. The leaders also paid floral tributes at the Cenotaph for the victims of the Atomic Bomb.

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு

May 20th, 08:16 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களது இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்

May 20th, 08:12 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

PM Modi arrives in Hiroshima, Japan

May 19th, 05:23 pm

Prime Minister Narendra Modi arrived in Hiroshima, Japan. He will attend the G7 Summit as well hold bilateral meetings with PM Kishida of Japan and other world leaders.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் பங்கேற்றார்

September 27th, 04:34 pm

டோக்கியோவின் நிப்பான் புடோக்கானில் நடைபெற்ற ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அரசு மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த இறுதிச்சடங்கில் 20க்கும் அதிகமான அரசுத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.