உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 'அக்ரிகோலா பதக்கத்தை ஏற்றுக்கொண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரை
May 20th, 11:00 pm
எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகவும், எனக்கு அக்ரிகோலா பதக்கத்தை வழங்கி கவுரவித்ததற்காகவும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தலைமை இயக்குநர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா குறித்த அவரது கனிவான வார்த்தைகளுக்கும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பிற்கு அவர் பல ஆண்டுகளாக ஆற்றிய பங்களிப்பிற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் அக்ரிகோலா பதக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது
May 20th, 10:55 pm
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில் 2026-ம் ஆண்டிற்கான மதிப்பு வாய்ந்த அக்ரிகோலா பதக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ரோம் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று (21.05.2026) வழங்கப்பட்டது. இந்திய மற்றும் உலக அளவில் உணவுப் பாதுகாப்பு, நீடித்த வேளாண்மை, ஊரக வளர்ச்சி, ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய சிறப்பான தலைமைத்துவத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.இந்திய-இத்தாலி கூட்டுப் பிரகடனம்
May 20th, 10:28 pm
இத்தாலியக் குடியரசின் அமைச்சர்கள் குழுவின் தலைவர் திருமிகு ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 மே 19-20 தேதிகளில் இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2024 ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி இத்தாலிக்குச் சென்றிருந்ததையும், 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் திருமிகு மெலோனி இந்தியாவுக்கு வந்திருந்ததையும் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. இந்திய-இத்தாலி உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.இத்தாலி பிரதமருடன் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
May 20th, 07:21 pm
இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன் 2026 மே 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, ரோம் நகரில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.இத்தாலி அதிபருடன் பிரதமர் சந்திப்பு
May 20th, 07:19 pm
ரோமில் உள்ள அதிபர் மாளிகையில், இத்தாலிய குடியரசின் அதிபர் மேதகு திரு செர்ஜியோ மட்டரெல்லாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.இத்தாலியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட பத்திரிகை செய்தி
May 20th, 05:00 pm
எனக்கும் எனது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காகப் பிரதமர் திருமதி மெலோனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரோம் நகரம் உலகம் முழுவதும் 'நிலையான நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில், எனது மக்களவைத் தொகுதியான வாரணாசியும் ஒரு நிலையான மற்றும் காலத்தால் அழியாத நகரமாகக் கருதப்படுகிறது. இரு பழம்பெரும் நாகரிகங்கள் ஒன்றிணையும் போது, அவற்றுக்கு இடையேயான உரையாடல் வெறும் நிகழ்ச்சி நிரலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது வரலாற்றின் ஆழத்தையும், எதிர்காலத்திற்கான பார்வையையும், நட்பின் இயல்பான நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது.முக்கியப் பணிகளுக்காக இத்தாலி வந்தடைந்த பிரதமர் மோடி
May 20th, 12:30 am
பிரதமர் சற்று நேரத்திற்கு முன்பு இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தடைந்தார். அவர் இத்தாலியக் குடியரசின் தலைவர் மாண்புமிகு திரு. செர்ஜியோ மட்டரெல்லாவைச் சந்திப்பார் மற்றும் பிரதமர் மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) குறித்து கவனம் செலுத்தும்.