தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு கயானா அதிபரின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி
November 25th, 10:39 am
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு ஆதரவு அளித்ததற்காக, கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நேற்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், கயானாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு திரு மோடி மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார்.கயானா நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
November 22nd, 05:31 am
கயானாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கிரிக்கெட் இந்தியாவையும் கயானாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது என்றும், கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.ஆரிய சமாஜ் நினைவுச் சின்னத்திற்கு பிரதமர் அஞ்சலி
November 22nd, 03:09 am
கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள ஆர்ய சமாஜ் நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். கயானாவில் இந்திய கலாச்சாரத்தை பாதுகாப்பதில் அவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்று திரு மோடி கூறினார். இந்த ஆண்டு சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வருகிறது: பிரதமர்
November 22nd, 03:06 am
இந்தியா-கயானா கலாச்சார இணைப்பை ஆழப்படுத்தும் சுவாமி ஆகாஷரானந்தா அவர்களின் பணிகளைப் பாராட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்குச் சென்று, கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் செழித்து வளர்கிறது என்று குறிப்பிட்டார்.கயானாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
November 22nd, 03:02 am
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடன் இணைந்ததற்காக அதிபர் இர்பான் அலிக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வந்ததிலிருந்து எனக்கு வழங்கப்பட்ட அன்பு மற்றும் பாசத்தால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். தமது இல்லத்தின் கதவுகளை எனக்காக திறந்து வைத்ததற்காக அதிபர் அலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினரின் அன்பு மற்றும் கருணைக்கு நான் நன்றி கூறுகிறேன். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதை என்னால் உணர முடிந்தது. அதிபர் அலி மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து நாங்களும் ஒரு மரத்தை நட்டோம். இது தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். அது நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு உணர்ச்சிகரமான தருணம் ஆகும்.கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர்
November 22nd, 03:00 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரதமர் மார்க் பிலிப்ஸ், துணை அதிபர் பரத் ஜக்தியோ, முன்னாள் அதிபர் டொனால்ட் ராமோதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு மோடி, அதிபருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பு மற்றும் கருணைக்கு அவர் மேலும் நன்றி தெரிவித்தார். விருந்தோம்பல் உணர்வு நமது கலாச்சாரத்தின் இதயத்தில் உள்ளது என்று திரு மோடி கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக அதிபர் மற்றும் அவரது பாட்டியுடன் இணைந்து மரம் ஒன்றை நட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் என்றும், அதை அவர் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.சுரினாம் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 10:57 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, சுரினாம் அதிபர் மேதகு திரு. சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.கிரெனடா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
November 21st, 10:44 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி.கிரெனடா பிரதமர் மேதகு திரு. டிக்கோன் மிட்செல்லை சந்தித்தார்.டிரினிடாட் & டொபாகோ பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
November 21st, 10:42 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் மேதகு டாக்டர் கீத் ரவுலேவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.இந்திய வருகை நினைவுச் சின்னத்தை பிரதமர் பார்வையிட்டார்
November 21st, 10:00 pm
ஜார்ஜ்டவுனில் உள்ள நினைவுச் சின்னத் தோட்டத்தில் உள்ள இந்திய வருகைச் சின்னத்தை பிரதமர் இன்று பார்வையிட்டார். அவருடன் கயானா பிரதமர் பிரிகேடியர் (ஓய்வு) மார்க் பிலிப்ஸும் சென்றார். வருகை நினைவுச் சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பிரதமரை தாஸ்ஸா டிரம்ஸ் இசைக் குழுவினர் வரவேற்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர், வெளிநாடுவாழ் இந்தியர்களின் போராட்டம் மற்றும் தியாகங்களையும், கயானாவில் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் அவர்களின் முக்கிய பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார். நினைவுச்சின்னத்தில் பெல் பத்ரா மரக்கன்றை அவர் நட்டார்.மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
November 21st, 09:57 pm
கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரோமினேட் கார்டனில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மனிதகுலத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய மகாத்மா காந்தியின் மாண்புகளை அவர் நினைவு கூர்ந்தார். 1969-ஆம் ஆண்டில் காந்திஜியின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.டொமினிகா பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு
November 21st, 09:29 pm
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்திய-கேரிகாம் 2-வது உச்சிமாநாட்டின் இடையே, டொமினிகா பிரதமர் மேதகு திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
November 21st, 07:50 pm
கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.செயிண்ட் லூசியா பிரதமரை பிரதமர் மோடி சந்தித்தார்
November 21st, 10:13 am
இரண்டாவது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று செயிண்ட் லூசியா பிரதமர் திரு. பிலிப் ஜே. பியருடன் பயனுள்ள விவாதங்களை நடத்தினார்.ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 09:37 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற 2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. கேஸ்டன் பிரவுனை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார்.பஹாமாஸ் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 21st, 09:25 am
2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டின் இடையே, பஹாமாஸ் பிரதமர் திரு பிலிப் டேவிஸை பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 20 அன்று சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.பார்படோஸ் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
November 21st, 09:13 am
கயானாவின் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி பார்படாஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லியை நவம்பர் 20 அன்று சந்தித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் பார்படாஸ் இடையேயான இருதரப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், வலுப்படுத்தவும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அளித்தது.PM Modi conferred with The Order of Excellence of Guyana
November 21st, 07:41 am
PM Modi was conferred Guyana's highest national award, The Order of Excellence, by President Dr. Mohamed Irfaan Ali for his visionary leadership and efforts to strengthen India-Guyana ties. The PM dedicated the honor to the people of India and the deep historical bond between the nations.டொமினிகாவின் உயரிய தேசிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
November 21st, 05:39 am
பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு டொமினிகா அதிபர் திருமதி சில்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கௌரவ விருதை வழங்கினார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. டொமினிக்கா பிரதமர் திரு. ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கயானா அதிபர் டாக்டர் இர்பான் அலி, பார்படோஸ் பிரதமர் திரு மியா அமோர் மோட்லி, கிரெனடா பிரதமர் திரு. டிக்கோன் மிட்செல், செயிண்ட் லூசியா பிரதமர் திரு பிலிப் ஜே. பியரி, ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் திரு. காஸ்டன் பிரவுன் ஆகியோரும் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.