இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
July 09th, 06:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார்.இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
July 09th, 05:55 am
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும்
July 09th, 03:14 am
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை கடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வது குறித்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 09th, 12:58 am
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.பிரதமர் மோடி பிரேசிலின் பிரேசிலியாவுக்கு வருகிறார்
July 08th, 02:55 am
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலியாவுக்கு வந்தார். இந்தியா-பிரேசில் உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனாதிபதி லூலாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் கியூபா அதிபரை சந்தித்தார்
July 07th, 05:19 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கிடையே, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கேனல் பெர்முடெஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். முன்னதாக 2023-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர், அதிபர் டயஸ்-கேனலை சந்தித்திருந்தார். அப்போது, கியூபா சிறப்பு அழைப்பு நாடாக இருந்தது.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமருடன் சந்திப்பு
July 07th, 05:13 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்புக்குப் பிரதமர் மகிழ்ச்சி
July 06th, 08:28 am
ரியோ டி ஜெனிரோவில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரத்துடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வரவேற்பிலிருந்து சில காட்சிகளையும் திரு நரேந்திர மோடி தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிற்கு வருகை தருகிறார்
July 06th, 04:47 am
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலுக்கு வந்தார். ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பல உலகத் தலைவர்களைச் சந்திப்பார்.