பிரதமருக்கு 'கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்' என்ற கௌரவம் வழங்கப்பட்டது
July 06th, 02:42 am
பிரதமர் திரு நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் திரு ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார்.அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேயை பிரதமர் சந்தித்தார்
July 06th, 01:48 am
பிரதமர் திரு நரேந்திர மோடி அர்ஜெண்டினா அதிபர் திரு ஜேவியர் மிலேயை சந்தித்தார். காசா ரோசாடாவுக்கு அவர் வந்தடைந்தபோது, அதிபர் மிலே அவரை அன்புடன் வரவேற்றார். முன்னதாக பியூனஸ் அயர்ஸ் வந்தடைந்த பிரதமருக்கு, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இரு நாடுகளும் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளைக் கொண்டாடும் இந்த ஆண்டு இந்தியா-அர்ஜெண்டினா உறவுகளுக்கு இது ஒரு முக்கிய ஆண்டாகும். தமக்கும் தமது தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.சான் மார்ட்டின் நினைவிடத்தில் பிரதமர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
July 06th, 12:08 am
அர்ஜென்டினாவின் தேசத் தந்தை ஜெனரல் ஜோஸ் டி சான் மார்டினுக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது அர்ஜெண்டினாவுக்கான அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கினார்.பிரதமர் மோடி அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸுக்கு வருகிறார்
July 05th, 07:23 am
பிரதமர் நரேந்திர மோடி சற்று நேரத்திற்கு முன்பு அர்ஜென்டினா வந்தடைந்தார். அவர் அதிபர் மிலியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.