ரஷ்ய அதிபருடனான சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை

September 01st, 01:24 pm

நான் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்திப்பதை எப்போதும் நினைவு கூரக்கூடிய அம்சமாக நான் உணர்கிறேன். பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை இது அளித்துள்ளது.

சீனாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை சந்தித்தார்

September 01st, 01:08 pm

சீனாவில் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினை இன்று (01.09.2025) சந்தித்துப் பேசினார். பொருளாதாரம், நிதி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இத்துறைகளில் இருதரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சிக் குறித்து, அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடியின் பெரிய அறிக்கை

September 01st, 12:48 pm

சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ஒரு சந்திப்பை நடத்தினார், அங்கு உக்ரைன் மோதல் ஒரு மைய விவாதப் புள்ளியாக இருந்தது. அமைதிக்கான சமீபத்திய முயற்சிகளை பிரதமர் மோடி வரவேற்றார், மேலும் அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமாக முன்னேறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவசரத் தேவையை அவர் வலியுறுத்தினார், மேலும் நீடித்த அமைதிக்கான பாதையைக் கண்டுபிடிப்பது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். பரந்த மனித பரிமாணத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, இது ஒரு பிராந்திய அக்கறை மட்டுமல்ல, மனிதகுலத்தின் அழைப்பு என்றும் கூறினார்.

25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 01st, 10:14 am

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

September 01st, 10:00 am

சீனாவின் தியான்ஜின் நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்கிடையே, மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணைய தலைவர் திரு மின் ஆங் ஹலைங்குடன் பிரதமர் சந்திப்பு

August 31st, 04:50 pm

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ-பசிபிக் கொள்கைகள் ஆகிய இந்திய கொள்கைகளின் ஒரு பகுதியாக, மியான்மருடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

தியான்ஜினில் சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடனான இருதரப்பு சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

August 31st, 11:06 am

உங்களது அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, கசானில் மிகவும் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நேர்மறையான பாதையை அளித்தது. எல்லையில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு அமைதியும் ஸ்திரத்தன்மையும் கொண்ட சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதி மேலாண்மை குறித்து நமது சிறப்பு பிரதிநிதிகள் ஒரு புரிதலை எட்டியுள்ளனர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகளும் தொடங்கப்படுகின்றன. நமக்கு இடையேயான ஒத்துழைப்பு நமது இரு நாடுகளின் 280 கோடி மக்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மனிதகுலத்தின் நலனுக்கும் வழி வகுக்கும். பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, உணர்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.

சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு

August 31st, 11:00 am

சீனாவின் தியான்ஜினில் இன்று (2026 ஆகஸ்ட் 31) நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

பிரதமர் மோடி சீனாவின் தியான்ஜின் வந்தடைந்தார்

August 30th, 04:00 pm

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு சீனா வந்தடைந்தார். இந்த பயணத்தின் போது, ​​அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புடின் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்திப்பார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது கூட்டத்தில், எஸ்.சி.ஓ சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகரமாக வாரணாசி பரிந்துரைப்பு

September 16th, 11:50 pm

செப்டம்பர் 16, 2022 அன்று உஸ்பெகிஸ்தானின் சமார்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில், 2022-2023 காலகட்டத்தில் வாரணாசி நகரம் முதல் எஸ்.சி.ஓ சுற்றுலா மற்றும் கலாச்சார தலைநகரமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார்.

துருக்கி அதிபர் எர்டோகனுடன் பிரதமர் சந்திப்பு

September 16th, 11:41 pm

சமர்க்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டுக்கு இடையே துருக்கி அதிபர் திரு ரெசெப் தையிப் எர்டோகனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

PM Modi arrives in Samarkand, Uzbekistan

September 15th, 10:01 pm

Prime Minister Shri Narendra Modi arrived in Samarkand, Uzbekistan this evening, at the invitation of the President of Uzbekistan, H.E. Mr. Shavkat Mirziyoyev, to attend the 22nd Meeting of the Council of Heads of State of the Shanghai Cooperation Organization (SCO).

உஸ்பெகிஸ்தான் பயணத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள அறிக்கை

September 15th, 02:15 pm

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் நான் சமர்கண்டிற்குச் செல்கிறேன்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார்

September 17th, 05:21 pm

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழுவின் 21-வது கூட்டத்தில் காணொலி மூலமும், ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு-சிஎஸ்டிஓ கூட்டு அமர்வில் காணொலி செய்தி மூலமும் பிரதமர் பங்கேற்றார்.

ஆப்கானிஸ்தான் குறித்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) உச்சிமாநாட்டில் பிரதமரின் உரை

September 17th, 05:01 pm

ஆப்கானிஸ்தான் குறித்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) ஆகியவற்றுக்கிடையேயான உச்சிமாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததற்காக அதிபர் ரஹ்மோனுக்கு நன்றி தெரிவித்து எனது உரையை தொடங்குகிறேன்.

21st Meeting of SCO Council of Heads of State in Dushanbe, Tajikistan

September 15th, 01:00 pm

PM Narendra Modi will address the plenary session of the Summit via video-link on 17th September 2021. This is the first SCO Summit being held in a hybrid format and the fourth Summit that India will participate as a full-fledged member of SCO.