சேவா உறுதி தீர்மானம்
February 24th, 04:53 pm
புதிய பிரதமர் அலுவலகமான சேவா தீர்த்தத்தில் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மத்திய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.Young karmayogis will lead the journey towards a developed India: PM Modi during Rozgar Mela
October 24th, 11:20 am
In his Rozgar Mela address, PM Modi congratulated the newly employed youth and emphasized that today’s appointments are opportunities to actively contribute to nation-building. Highlighting that happiness has reached over 51,000 youth across the country today, he noted that more than 11 lakh appointment letters have been issued through Rozgar Melas in recent times. He also highlighted the utility of the ‘i-Got Karmayogi Bharat Platform’ in their journey.வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 24th, 11:00 am
வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும். இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்திருப்பதாக திரு மோடி கூறினார். அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும் என்று கூறிய அவர், நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்
September 11th, 02:10 pm
அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 11th, 12:30 pm
எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.கர்நாடகாவின் பெங்களூருவில் பல்வேறு மெட்ரோ திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 10th, 01:30 pm
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் ₹22,800 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
August 10th, 01:05 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.புதுதில்லி கடமைப்பாதையில் கடமை மாளிகை தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 06th, 07:00 pm
மத்திய அமைச்சரவையின் சகாக்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசு ஊழியர்களே, சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற கடமை மாளிகையின் திறப்பு விழாவில் உரையாற்றினார்
August 06th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற கடமை மாளிகை -3-ன் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக ,புரட்சி மாதமான ஆகஸ்ட், மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொடர்புடைய முக்கிய சாதனைகளை இந்தியா ஒன்றன் பின் ஒன்றாகக் காண்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். புதுதில்லியைப் பற்றி குறிப்பிட்டு, கடமைப் பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத மண்டபம், யசோபூமி, தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் இப்போது கடமை மாளிகை போன்ற சமீபத்திய உள்கட்டமைப்பு அடையாளங்களை திரு மோடி பட்டியலிட்டார். இவை வெறும் புதிய கட்டிடங்கள் அல்லது வழக்கமான உள்கட்டமைப்பு அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவை வடிவமைக்கும் கொள்கைகள் இந்தக் கட்டமைப்புகளிலேயே வகுக்கப்படும் என்றும், வரும் தசாப்தங்களில், இந்த இடங்களிலிருந்தே நாட்டின் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். கடமை மாளிகையின் திறப்பு விழாவிற்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.வேலைவாய்ப்புத் திருவிழா – மத்திய அரசுத் துறைகளில் 51,000 பேருக்கு நாளை பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார் பிரதமர்
July 11th, 11:20 am
மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு நாளை (2025 ஜூலை 12-ம் தேதி) காலை 11:00 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் 51,000-க்கும் அதிகமானவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி அவர் உரையாற்ற உள்ளார்.Today, India's youth are demonstrating our immense potential to the world, through their dedication and innovation: PM Modi in Rozgar Mela
April 26th, 11:23 am
PM Modi addressed the Rozgar Mela and distributed more than 51,000 appointment letters to youth. He highlighted that the government is ensuring employment and self-employment opportunities for the country's youth. The PM spoke about the immense opportunity WAVES 2025 summit offers for the youth. He recalled the mantra of ‘Nagrik Devo Bhava,’ and encouraged youth to serve every citizen of India.வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
April 26th, 11:00 am
இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்17-வது குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 21st, 11:30 am
எனது அமைச்சரவை நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, திரு. சக்திகாந்த தாஸ் அவர்களே, டாக்டர் சோமநாதன் அவர்களே, இதர மூத்த அதிகாரிகளே, நாடு முழுவதிலும் உள்ள குடிமைப் பணிகளைச் சேர்ந்த நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!17-வது குடிமைப் பணி தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
April 21st, 11:00 am
17-வது குடிமைப் பணிகள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், குடிமைப்பணி அதிகாரிகளிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொது நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். குடிமைப் பணித் தினத்தையொட்டி வாழ்த்துத் தெரிவித்த அவர், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டு, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த தினம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 1947-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி சர்தார் படேல் குடிமைப் பணி அதிகாரிகளை 'இந்தியாவின் எஃகுக் கட்டமைப்பு' என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக மாண்புகள் ஆகிய பண்புகளுடன் தேசத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் அதிகாரத்துவம் என்ற படேலின் தொலைநோக்குப் பார்வையைச் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியைடந்த இந்தியாவாக உருவெடுப்பதற்கான உறுதிப்பாட்டின் பின்னணியில் சர்தார் படேலின் கொள்கைகள் அமைந்துள்ளதாக திரு மோடி புகழாரம் சூட்டினார்.வேலைவாய்ப்புத் திருவிழாவில் காணொலிக் காட்சி மூலம் 71,000க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
December 23rd, 11:00 am
நான் நேற்று இரவு குவைத்திலிருந்து திரும்பினேன். அங்கு, நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் ஒரு விரிவான சந்திப்பை நடத்தினேன். அர்த்தமுள்ள விவாதங்களில் ஈடுபட்டேன். இப்போது, நான் நாடு திரும்பி வந்தவுடன், எனது முதல் நிகழ்ச்சி நம் தேசத்தின் இளைஞர்களுடனான நிகழ்ச்சியாக உள்ளது - உண்மையில் இது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய நிகழ்வு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. உங்களின் பல ஆண்டுகால கனவுகள் பலனளித்துள்ளன. உங்களின் இடைவிடாத முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது. கடந்து செல்லும் 2024-ம் ஆண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் புதிய மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்கிறது. இந்த மகத்தான தருணத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்
December 23rd, 10:30 am
அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிய நியமனங்களுக்கு 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை பிரதமர் டிசம்பர் 23 அன்று விநியோகிக்கிறார்
December 22nd, 09:48 am
71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 23 அன்று காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
December 13th, 12:53 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும்.வேலைவாய்ப்பு திருவிழாவின் கீழ் 51,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கி பிரதமர் ஆற்றிய உரை
October 29th, 11:00 am
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள எனது அமைச்சரவை சகாக்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தேசத்தின் இளம் நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 29th, 10:30 am
வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.