அபுதாபியின் பட்டத்து இளவரசர் மேன்மைதங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்
February 19th, 05:45 pm
2026 பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர் மேன்மைதங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2026 பிப்ரவரி 19 அன்று புதுதில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்றார். ஏற்கனவே, செப்டம்பர் 2024-ல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டதையடுத்து, இந்தப் பயணம் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமானோருக்கு நியமனக் கடிதங்களை ஜனவரி 24 அன்று பிரதமர் வழங்கவுள்ளார்
January 23rd, 05:46 pm
18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை 2026 ஜனவரி 24 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் இடையே அவர் உரையாற்றுவார்.உடல் பருமனை தடுக்கவும், எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் பிரதமர் விடுத்த அழைப்புக்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்
January 31st, 06:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் ஒரு தெளிவான அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.முடிவுகளின் விபரம்: இந்தோனேசிய அதிபரின் அரசுமுறை இந்திய பயணம் (ஜனவரி 23-26, 2025)
January 25th, 08:54 pm
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிய நியமனங்களுக்கு 71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை பிரதமர் டிசம்பர் 23 அன்று விநியோகிக்கிறார்
December 22nd, 09:48 am
71,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 23 அன்று காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு
December 07th, 02:38 pm
காசநோயை ஒழிக்கும் இந்தியாவின் செயல்பாடுகள் தற்போது வலுவடைந்துள்ளது என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தும் வகையில் 100 நாள் சிறப்பு இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். காசநோய் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா எழுதிய கட்டுரையை மக்கள் படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அக்டோபர் 29 அன்று பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்குகிறார்
October 28th, 01:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு 51,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை 2024 அக்டோபர் 29 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.