‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
May 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலகிற்கு ஒரு முன் உதாரணமாக இருக்கலாம்: ‘மன் கீ பாதின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
June 27th, 11:30 am
நண்பர்களே, நீங்கள் எனக்கு விடை அனுப்பினாலும் அனுப்பா விட்டாலும், MyGov தளத்தில் ஒலிம்பிக்குகள் தொடர்பான வினாவிடை இருக்கிறது, இதில் இருக்கும் வினாக்களுக்கு விடைகளை அளித்து பல பரிசுகளை வெல்லுங்கள். இதே போல நிறைய வினாக்கள் MyGov தளத்தின் Road to Tokyo Quiz, அதாவது டோக்கியோவுக்கான பாதை வினா-விடைப் போட்டியில் இருக்கிறது. நீங்கள் இந்த Road to Tokyo Quizஇல் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். முன்பு பாரதம் எப்படி செயல்பட்டது? இப்போது டோக்யோ ஒலிம்பிக்ஸுக்கான தயாரிப்புகள் என்னென்ன? – இவை அனைத்தும் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இந்த வினா விடைப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.புகழ்பெற்ற தடகள வீரர் திரு மில்கா சிங்கின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
June 19th, 08:45 am
பிரபல தடகள வீரர் திரு மில்கா சிங் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து எண்ணிலடங்காத இந்தியர்களின் மனதில் சிறப்பான இடம் பிடித்த மாபெரும் விளையாட்டு வீரர் என்று அவரை திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.