கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணாளிகளுக்கான நிதியுதவியை 20, ஜனவரி அன்று பிரதமர் விடுவிக்க உள்ளார்

January 19th, 04:03 pm

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் திரு.நரேந்திர மோடி, 20 ஜனவரி, 2021 அன்று பகல் 12 மணியளவில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் விடுவிக்க உள்ளார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதலமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவிக்க உள்ள நிதியுதவியில் அடங்கும்.

‘கிரகப்பிரேவசம்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று பங்கேற்கும் பிரதமர், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார்

September 10th, 06:10 pm

'கிரகப்பிரேவசம்' நிகழ்ச்சியில் செப்டம்பர் 12-ஆம் தேதி அன்று காணொலி மூலம் பங்கேற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை திறந்து வைக்கிறார்.