செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் ஒடிசாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்

September 26th, 09:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், ஜார்சுகுடாவில் ஏறத்தாழ ரூ.60,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வின்போது அவர் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். இந்தத் திட்டங்கள் தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வீட்டுவசதித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன.

தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.4200 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

August 08th, 04:04 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 175 பொறியியல் நிறுவனங்கள் மற்றும் 100 பாலிடெக்னிக் கல்லூரிகளை உள்ளடக்கிய 275 தொழில்நுட்ப நிறுவனங்களில் 'தொழில்நுட்பக் கல்வியில் பலதுறை கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு' திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-உடன் இணைக்கப்பட்ட தலையீடுகளை செயல்படுத்துவதன் மூலம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய தொழில்நுட்பக் கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.