ஆசிய கோப்பை 2025ல் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சிறப்பான வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
September 08th, 07:20 am
பீகாரின் ராஜ்கிரில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025ல் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சிறப்பான வெற்றிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போதைய சாம்பியன்களான தென் கொரியாவை வீழ்த்தியதால், இந்த வெற்றி இன்னும் சிறப்பானது, என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.தேசிய விளையாட்டு தினத்தன்று பீகாரின் ராஜ்கிரில் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 28th, 09:33 pm
பீகாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ராஜ்கிரில் நாளை (ஆகஸ்ட் 29, 2025) ஆடவர் ஹாக்கி ஆசியக் கோப்பை 2025 போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு, ஆசியா முழுவதிலும் இருந்து இதில் பங்கேற்கும் அணிகள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2025, 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் 2025, ஐஎஸ்டிஏஎஃப் செபக் தக்ரா உலகக் கோப்பை 2024 மற்றும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 போன்ற முக்கிய போட்டிகளை நடத்தி, சமீப காலங்களில் துடிப்பான விளையாட்டு மையமாக முத்திரை பதித்துள்ள பீகார் மாநிலத்தை திரு மோடி பாராட்டினார்.