பிரதமர் அசாம் மாநிலத்தில் மார்ச் 13-14 தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்
March 12th, 05:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மார்ச் 13-14 ஆகியத் தேதிகளில், அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, கோக்ரஜார், குவஹாத்தி மற்றும் சில்சார் பகுதிகளில் ரூ 47,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றது திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.ஷில்லாங் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 20th, 09:31 am
ஷில்லாங் தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
February 05th, 08:36 pm
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்ஷியா மலைகளில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000மும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.மேகாலயா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
January 29th, 08:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 21st, 09:28 am
மூன்று வடகிழக்கு மாநிலங்கள் உதயமான தினத்தைக் கொண்டாடும் நிலையில், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மேகாலயா மாநிலம் உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 21st, 09:21 am
மேகாலயா மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, இன்று (21 ஜனவரி, 2026) அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.மாநில உதய தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
January 21st, 08:44 am
மாநில உதய தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் அஷ்டலட்சுமி மகோத்சவ் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 06th, 02:10 pm
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் பிற மக்கள் பிரதிநிதிகளே, வடகிழக்கைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே!அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
December 06th, 02:08 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.மேகாலயா ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
August 03rd, 10:05 pm
மேகாலயா ஆளுநர் திரு. சி.எச். விஜயசங்கர் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.பிரதமரை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்
July 15th, 12:18 pm
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 21st, 09:25 am
மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.நீங்கள் உங்கள் கிராமத்தின் மோடி என்று மேகாலயாவின் ரி போய் பகுதியைச் சேர்ந்த சில்மே மராக்கிடம் பிரதமர் பேச்சு
January 18th, 03:47 pm
வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். நாடு முழுவதிலும் இருந்து வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
December 27th, 08:36 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.மேகாலயா முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
December 14th, 04:28 pm
மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்
August 19th, 11:10 am
மேகாலயாவின் அன்னாசிப்பழங்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேகாலயா மாநில முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரைச் சந்தித்தனர்
August 08th, 04:30 pm
மேகாலயா முதலமைச்சர் திரு கே. சங்மா, மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு தாமஸ் ஏ. சங்மா மற்றும் மேகாலயா மாநில அமைச்சர்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (08-08-2023) சந்தித்தனர்.அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 29th, 12:22 pm
அசாம் ஆளுநர் திரு குலாப்சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ராமேஷ்வரி தெலி அவர்களே, திரு நிஷித் பிரமாணிக் அவர்களே, திரு ஜான் பர்லா அவர்களே மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர- சகோதரிகளே!குவாஹத்தியிலிருந்து புதிய ஜல்பைகுரி வரையிலான அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
May 29th, 12:21 pm
அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் விரைவு ரயில், குவாஹத்தி- புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 182 வழித்தடக் கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களையும் இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் அசாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்ட டெமு/மெமு பணிமனையையும் பிரதமர் திறந்து வைத்தார்.