பிரதமர் மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்
June 14th, 11:58 am
பிரதமர் மோடி ஜூன் 15-16 தேதிகளில் சைப்ரஸுக்கும், ஜூன் 16-17 தேதிகளில் ஜி-7 உச்சி மாநாட்டிற்காக கனடாவுக்கும், ஜூன் 18 அன்று குரோஷியாவுக்கும் செல்கிறார். பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் லிமாசோலில் வணிகத் தலைவர்களுடன் உரையாற்றுவார். பின்னர் கனடாவில், ஜி-7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். குரோஷியாவில், பிரதமர் மோடி பிரதமர் பிளென்கோவிச்சுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் குரோஷிய அதிபர் சோரன் மிலானோவிக்கைச் சந்திப்பார்.கிரீஸ் பிரதமரின் இந்திய பயணத்தின் போது அவருடன் இணைந்து நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் (பிப்ரவரி 21, 2024)
February 21st, 01:30 pm
பிரதமர் மிட்சோடாகிஸ் மற்றும் அவரது குழுவினரை இந்தியாவுக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு நான் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில், அவரது இந்த இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும். பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, கிரீஸ் நாட்டுப் பிரதமர் இந்தியாவுக்கு வந்திருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.