மத்துவ தர்ம மேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

March 16th, 01:12 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்துவா தர்ம மேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்வு பூர்ண பிரஹ்ம ஸ்ரீ ஸ்ரீ ஹரிச்சந்த் தாகூர்ஜியின் ஜெயந்தியுடன் தொடர்புடையது. “நான் அவருக்கு எனது பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன். அவரது சிந்தனைகளும் போதனைகளும் பலருக்குத் தொடர்ந்து பலத்தையும் நம்பிக்கையையும் அளித்து வருகின்றன. அவை கண்ணியம், சமத்துவம் மற்றும் பக்தி ஆகியவற்றுக்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை எழுச்சியடையச் செய்தன. நீதி, இணக்கம் மற்றும் கூட்டு மேம்பாடு என்ற பாதையில் நடக்க அவர் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தார்” என்று திரு மோடி கூறியுள்ளார்.