இந்திய-இஸ்ரேல் கூட்டறிக்கை

February 26th, 07:44 pm

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஆழமான உத்தி சார்ந்த கூட்டாண்மையை அங்கீகரித்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 25 முதல் 26, 2026 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிரதமருடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் சென்றது. பிரதமர் திரு நெதன்யாகுவும், பிரதமர் திரு மோடியும் உத்திசார் கூட்டாண்மையை ‘அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மை’ என்ற ஒரு புதிய நிலைக்கு உயர்த்த முடிவு செய்தனர்.