பிரதமர் ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்
January 09th, 12:07 pm
பிரதமர் 2026 ஜனவரி 11 அன்று ராஜ்கோட்டுக்குப் பயணம் செய்து, கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டில் பங்கேற்பார். பிற்பகல் 1:30 மணியளவில், மாநாட்டில் வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் 2 மணியளவில், ராஜ்கோட்டில் உள்ள மார்வாடி பல்கலைக்கழகத்தில் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பு மிக்க குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.