மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
April 27th, 09:55 pm
மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சௌரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.