தில்லி மால்வியா நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
June 03rd, 01:04 pm
தில்லி மால்வியா நகரில் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது, மிகவும் துயரமானது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.