அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

December 29th, 11:30 am

நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!

பிரதமர் மோடியின் தலைமை மலேரியாவுக்கு எதிராக பிரமிக்க வைக்கும் வெற்றியை அளித்துள்ளது, சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது: ஜேபி நட்டா

December 16th, 10:06 am

2017ல் 6.4 மில்லியனாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 2023ல் வெறும் 2 மில்லியனாக மலேரியா நோயாளிகளில் குறிப்பிடத்தக்க அளவில் 69% குறைப்பை இந்தியா அடைந்துள்ளது. இந்த வெற்றியானது பிரதமர் நரேந்திர மோடியின் கவனமுள்ள கொள்கை மற்றும் தலைமைக்குக் கிடைத்த பரிசாகும். 2015 கிழக்காசிய உச்சி மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதற்கான பிரதமர் மோடியின் பெரிய இலக்கின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் உள்ளது.