பிரதமர் நரேந்திர மோடியின் நட்சத்திர தொடக்கம் 2025: வெறும் 15 நாட்களில் கனவை நிஜமாக மாற்றும் முயற்சி
January 16th, 02:18 pm
பிரதமர் நரேந்திர மோடி 2025 ஆம் ஆண்டை, ஒரு முற்போக்கான, தன்னிறைவு மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தனது பார்வையை வெளிப்படுத்தும் வகையில், உருமாறும் முயற்சிகளுடன் தொடங்கியுள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவது முதல் இளைஞர்களை மேம்படுத்துவது மற்றும் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது வரை, அவரது தலைமையானது குறிப்பிடத்தக்க ஆண்டிற்கான தொனியை அமைத்துள்ளது.மகர சங்கராந்தியை முன்னிட்டு மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதல் அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
January 14th, 02:29 pm
மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி இன்று மகாகும்பமேளாவில் நடைபெற்ற முதலாவது அமிர்தக் குளியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 14th, 10:45 am
மத்திய அமைச்சர்கள் குழுவின் எனது சக நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, டபிள்யூ.எம்.ஓவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டி சவுலோ அவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம் ரவிச்சந்திரன் அவர்களே, ஐ.எம்.டியின் தலைமை இயக்குநர் டாக்டர். மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்களே, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் விஞ்ஞானிகளே, அதிகாரிகளே, தாய்மார்களே, அன்பர்களே!இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 14th, 10:30 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது என்றும் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் பாராட்டினார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாதனைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் இன்று பிரதமர் வெளியிடப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எதிர்காலத்தை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.மகர சங்கராந்தி, உத்தராயண் மற்றும் மக் பிஹு தினங்களில் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 14th, 08:40 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு மகர சங்கராந்தி, உத்தராயண் மற்றும் மக் பிஹு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொண்டார்
January 13th, 10:04 pm
மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இது நமது கலாச்சாரத்தின் விவசாய மரபுகளில் ஆழமாக வேரூன்றிய, நன்றியுணர்வு, நிறைவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் கொண்டாட்டமாகும் என்று பிரதமர் திரு மோடி கூறினார்.ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 13th, 12:30 pm
துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு ஜிதேந்திர சிங் அவர்களே, அஜய் தம்தா அவர்களே, துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரி அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா அவர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
January 13th, 12:15 pm
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து பணிகளை நிறைவேற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.We are not just the Mother of Democracy; democracy is an integral part of our lives: PM
January 09th, 10:15 am
PM Modi inaugurated the 18th Pravasi Bharatiya Divas convention in Bhubaneswar, Odisha. Expressing his heartfelt gratitude to the Indian diaspora and thanking them for giving him the opportunity to hold his head high with pride on the global stage, Shri Modi highlighted that over the past decade, he had met numerous world leaders, all of whom have praised the Indian diaspora for their social values and contributions to their respective societies.ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 09th, 10:00 am
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களை வரவேற்ற திரு மோடி, இந்த தொடக்க பாடல் எதிர்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய புலம் பெயர்ந்தோர் நிகழ்வுகளிலும் இசைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்திய புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளை வெளிப்படுத்திய அற்புதமான பாடலுக்காக கிராமி விருது பெற்ற கலைஞர் ரிக்கி கெஜ்-ஐயும், அவரது குழுவினரையும் அவர் பாராட்டினார்.குவைத்தில் இந்திய சமூகத்தினர் நடத்திய 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 21st, 06:34 pm
நான் இரண்டரை மணி நேரத்திற்கு முன்புதான் குவைத் வந்தேன். நான் இங்கு காலடி எடுத்து வைத்ததிலிருந்து, சுற்றிலும் ஒரு தனித்துவமான சொந்தம் மற்றும் அரவணைப்பை உணர்ந்தேன். நீங்கள் அனைவரும் பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள், ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும்போது, ஒரு சிறிய இந்துஸ்தான் எனக்கு முன்னால் உயிர் பெற்று வந்ததைப் போல உணர்கிறேன்.குவைத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
December 21st, 06:30 pm
குவைத் நகரில் உள்ள ஷேக் சாத் அல் அப்துல்லா உள்விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 'ஹலா மோடி' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் திரண்டிருந்த இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குவைத்தில் உள்ள பல்வேறு சமூகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாட்டினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.Journey of Venkaiah Ji’s life is a source of inspiration for the younger generations: PM Modi
June 30th, 12:05 pm
PM Modi released three books on the life and journey of former Vice President of India, Shri M. Venkaiah Naidu on the eve of his 75th birthday via video conferencing. He expressed delight in releasing Shri M. Venkaiah Naidu’s biography and two other books based on his life. He expressed confidence that these books will become a source of inspiration for the people while also illuminating the correct path to serving the nation.முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்
June 30th, 12:00 pm
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார்.அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 28th, 11:30 am
நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 15th, 12:15 pm
வாழ்த்துகள்! உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல், பிஹு போன்ற கொண்டாட்டங்களால் தற்போது நாடு முழுவதும் ஒரு பண்டிகை சூழல் பரவியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் உரையாடுவதை ஒரு கொண்டாட்டமாக உணர்கிறேன். தற்போது, அயோத்தியில் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில், என் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மிகவும் பின்தங்கிய ஒரு லட்சம் பழங்குடி சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் மகிழ்ச்சியுடன் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இன்று வீடு கட்டுவதற்காக அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சியான மகர சங்கராந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர்-ஜன்மனின் கீழ் 1 லட்சம் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுக்கு முதல் தவணையை பிரதமர் வெளியிட்டார்
January 15th, 12:00 pm
பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பி.எம்-ஜன்மன்) திட்டத்தின் கீழ், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் முதல் தவணையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
January 15th, 09:38 am
மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.புதுதில்லியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 14th, 12:00 pm
பொங்கல் திருநாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பொங்கல் பண்டிகையின் உணர்வு காணப்படுகிறது. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, மனநிறைவு ஆகியவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். நேற்று, நாடு முழுவதும் லோஹ்ரி திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சிலர் இன்று மகர சங்கராந்தி-உத்தராயணத்தை அனுசரிக்கிறார்கள், மற்றவர்கள் நாளை கொண்டாடலாம். மாக் பிஹுவும் ஒரு மூலையில் நடைபெருகிறது. இவ்விழாக்களுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தில்லி பொங்கல் விழாவில் பிரதமர் பங்கேற்பு
January 14th, 11:30 am
புதுதில்லியில் உள்ள மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.