ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 12:45 pm
ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 12:30 pm
இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.பிரேசில் அதிபரிடமிருந்து, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு
August 07th, 09:27 pm
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தொலைபேசி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் பேசினார்.இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு
July 09th, 06:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் 4-வது கட்டமாக பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்றடைந்தார். அங்குள்ள அல்வோராடா அரண்மனையில் அந்நாட்டு அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்துப் பேசினார். முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் திரு லூலா பாரம்பரிய முறைப்படி அன்புடன் வரவேற்றார்.இந்தியா – பிரேசில் – உயரிய நோக்கங்களைக் கொண்ட இரண்டு பெரிய நாடுகளின் கூட்டறிக்கை
July 09th, 05:55 am
பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 09th, 12:58 am
பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
July 08th, 08:30 pm
ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.பிரதமர் மோடி பிரேசிலின் பிரேசிலியாவுக்கு வருகிறார்
July 08th, 02:55 am
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக சிறிது நேரத்திற்கு முன்பு பிரேசிலியாவுக்கு வந்தார். இந்தியா-பிரேசில் உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஜனாதிபதி லூலாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த பிரிக்ஸ் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
July 06th, 11:07 pm
உலகளாவிய அமைதியும் பாதுகாப்பும் வெறும் இலட்சியங்கள் மட்டுமல்ல, மாறாக அவை நமது பகிரப்பட்ட நலன்கள் மற்றும் எதிர்காலத்தின் அடித்தளமாகும். அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் மட்டுமே மனித சமூகத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் பிரிக்ஸ் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது முயற்சிகளை ஒருங்கிணைத்து, நாம் அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் ஒன்றாக முன்னேற வேண்டும்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் குறித்த பிரதமரின் உரை
July 06th, 09:41 pm
பிரிக்ஸ் உச்சிமாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் தலைமையின் கீழ், பிரிக்ஸ் உச்சி மாநாடு புதிய உத்வேகத்தையும் எழுச்சியையும் பெற்றுள்ளது. இதற்காக அந்நாட்டு அதிபரின் தொலைநோக்குப் பார்வையையும் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் பாராட்டுகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாக இந்தோனேசியா சேர்க்கப்பட்டதற்கு அந்நாட்டு அதிபர் திரு பிரபோவோவுக்கு இந்தியா சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.பிரிக்ஸ் உச்சிமாநாடு: பலதரப்புவாதம், பொருளாதார-நிதிசார் விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல் குறித்த பிரதமரின் அறிக்கை
July 06th, 09:40 pm
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நண்பர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த மாநாட்டில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த நட்பு நாடுகளுடன் எனது கருத்துக்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த பிரேசில் அதிபர் திரு லூலாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்
July 06th, 09:39 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்றார். உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய வளரும் நாடுகளின் பொருளாதார கோரிக்கைகளை வலியுறுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், வளர்ச்சி விவகாரங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கப்பூர்வ விவாதங்களை நடத்தினார்கள். பிரேசில் அதிபரின் அன்பான விருந்தோம்பலுக்காகவும் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
July 02nd, 07:34 am
அதிபர் திரு ஜான் டிராமணி மஹாமாவின் அழைப்பின் பேரில், ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் கானா செல்கிறேன். கானா உலகளாவிய தென்பகுதி நாடுகளில் ஒரு மதிப்புமிக்க தோழமை கூட்டாண்மை நாடாகும். மேலும் ஆப்பிரிக்க யூனியனிலும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது வரலாற்று உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதையும், முதலீடு, எரிசக்தி, சுகாதாரம், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, வளர்ச்சிக் கூட்டாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எனது கருத்துப் பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன். சக ஜனநாயக நாடாக, கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது கௌரவமிக்கதாக அமையும்.Prime Minister Narendra Modi to visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil, and Namibia
June 27th, 10:03 pm
PM Modi will visit Ghana, Trinidad & Tobago, Argentina, Brazil and Namibia from July 02-09, 2025. In Ghana, Trinidad & Tobago and Argentina, the PM will hold talks with their Presidents to review the strong bilateral partnership. In Brazil, the PM will attend the 17th BRICS Summit 2025 and also hold several bilateral meetings. In Namibia, PM Modi will hold talks with the President of Namibia and deliver an address at the Parliament of Namibia.ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்களுடன் பிரதமர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை
June 18th, 03:05 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று (2025 ஜூன் 17) நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார். உலகளாவிய தென்பகுதி நாடுகளின் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து
December 12th, 09:50 pm
பிரேசில் அதிபர் திரு லூலா டா சில்வா அறுவை சிகிச்சைக்குப் பிறகு நல்ல உடல்நலம் பெற்று விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
November 20th, 08:05 pm
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரேசில் அதிபர் திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். அதிபர் லூலாவின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பிரேசிலின் ஜி20 மற்றும் இப்சா தலைமைப் பதவிகளின் வெற்றிக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை உருவாக்கும் பிரேசிலின் முன்முயற்சியைப் பாராட்டிய பிரதமர், அதற்கு இந்தியாவின் வலுவான ஆதரவைத் தெரிவித்தார். ஜி-20 முக்கூட்டு உறுப்பினர் என்ற முறையில், நீடித்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆளுமை சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பிரேசிலின் ஜி-20 நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரிக்ஸ் மற்றும் COP 30-க்கு பிரேசில் தலைமை வகிப்பதற்கான தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், இந்தியாவின் முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்."சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் ஆற்றிய உரை
November 18th, 08:00 pm
ஜி-20 உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகளுக்காக அதிபர் லூலாவை நான் முதலில் பாராட்ட விரும்புகிறேன்.சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம் குறித்த ஜி-20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்
November 18th, 07:55 pm
'சமூக உள்ளடக்கம் மற்றும் பசி, வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் ஜி 20 மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டிற்கு ஏற்பாடு செய்ததற்காகவும், சிறப்பான விருந்தோம்பலுக்காகவும் பிரேசில் அதிபர் மேதகு திரு. லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட பிரேசிலின் ஜி 20 செயல்திட்டத்தைப் பாராட்டிய அவர், இந்த அணுகுமுறை உலகளாவிய தெற்கின் கவலைகளை எடுத்துக்காட்டுகிறது என்றும் புதுதில்லி ஜி 20 உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட மக்களை மையமாகக் கொண்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் அழைப்பு ரியோ உரையாடல்களில் தொடர்ந்து எதிரொலிக்கிறது என்பதை அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
November 16th, 12:45 pm
நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன்.