போர்ச்சுகல் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 06:08 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இடையே, போர்ச்சுகீசிய குடியரசு பிரதமர் திரு. லூயிஸ் மாண்டிநீக்ரோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். 2024 ஏப்ரலில் பிரதமராக மாண்டிநீக்ரோ பிரதமர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மாண்டிநீக்ரோ வாழ்த்து தெரிவித்தார்.