Chhattisgarh is rapidly advancing on the path of development:PM Modi at Chhattisgarh Rajat Mahotsav
November 01st, 03:30 pm
In his address at the Chhattisgarh Rajat Mahotsav, PM Modi said that participating in the Silver Jubilee celebrations was a matter of great fortune for him. Launching multiple developmental projects worth over ₹14,260 crore across key sectors such as roads, industry, healthcare and energy, the PM remarked that Chhattisgarh is now emerging as an industrial state. He noted that regions like Bastar are now witnessing an atmosphere of celebration, free from the shadow of Maoist terrorism.சத்தீஸ்கர் மாநிலத்தின் நிறுவன தின விழாவில் பிரதமர் உரையாற்றினார்
November 01st, 03:26 pm
சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், நவ ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சாலைகள், தொழில், சுகாதாரம் மற்றும் எரிசக்தி போன்ற முக்கிய துறைளில் சுமார் ரூ. 14,260 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்
September 13th, 10:30 am
மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 13th, 10:00 am
மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்
September 12th, 02:12 pm
மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலங்களில் செப்டம்பர் 13 முதல் 15 வரை பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார்.மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 18th, 02:35 pm
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி வி ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான ஹர்தீப் சிங் பூரி, சந்தானு தாக்கூர், சுகந்த மஜூம்தார் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களான சௌமிக் பட்டாச்சார்யா, ஜோதிர்மய் சிங் மகத்தோ அவர்களே, ஏனைய மக்கள் பிரதிநிதிகளே, எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்!மேற்கு வங்கத்தின் துர்காபூரில் சுமார் ₹5,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்தார்.
July 18th, 02:32 pm
மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி சுமார் 5,400 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், எஃகு நகரம் என்று அழைக்கப்படும் துர்காபூர், இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் முக்கிய மையமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார், மேலும் இன்று அந்தப் பங்கை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும், எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை அதிகரிக்கும் மற்றும் எஃகு நகரமாக துர்காபூரின் அடையாளத்தை வலுப்படுத்தும் என்று திரு. மோடி குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் இந்தியாவில் தயாரித்தல், உலகத்திற்காக தயாரித்தல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன என்றும், மேற்கு வங்கத்தை முன்னேற்ற உதவும் என்றும் பிரதமர் கூறினார். பிராந்திய இளைஞர்களுக்கு ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக அனைவருக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 12th, 11:30 am
மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
July 12th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.போபாலில் உள்ள தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 31st, 11:00 am
மத்தியப் பிரதேச ஆளுநர், திரு மங்குபாய் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மோகன் யாதவ் அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணையும் மத்திய அமைச்சர்களே, இந்தூரைச் சேர்ந்த தோகான் சாஹு அவர்களே, தாத்தியாவிலிருந்து இணையும் திரு ராம் மோகன் நாயுடு அவர்களே, சத்னாவிலிருந்து இணையும் திரு முரளிதர் மோஹோல் அவர்களே, மேடையில் இருக்கும் மாநில துணை முதலமைச்சர்கள் திரு. ஜெகதீஷ் தேவ்தா & திரு. ராஜேந்திர சுக்லா அவர்களே, மக்களவை நண்பர் திரு. வி. டி. சர்மா அவர்களே, இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு அதிகாரமளித்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
May 31st, 10:27 am
லோகமாதா தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற லோக்மாதா தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'மா பாரதி'க்கு அஞ்சலி செலுத்தி, நாட்டில் உள்ள பெண்களின் வலிமைக்கு அங்கீகாரம் கிடைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்துள்ள சகோதரிகள் மற்றும் மகள்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் வருகையால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார். லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகவும், நாட்டைக் கட்டமைக்கும் மகத்தான முயற்சிகளுக்கு பெண்கள் பங்களிக்கும் தருணமாகவும் அமைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். தேவி அஹில்யாபாயை மேற்கோள் காட்டி பேசிய அவர், உண்மையான நிர்வாகம் என்பது மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்துவாரில் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரை
May 29th, 01:30 pm
அலிப்பூர்துவாரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பூமியிலிருந்து மேற்குவங்க மாநில மக்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கம், அலிப்பூர்துவாரில் ரூ.1010 கோடிக்கும் அதிக மதிப்பிலான நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்குப் அடிக்கல் நாட்டினார்
May 29th, 01:20 pm
இந்தியாவில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வரலாற்று சிறப்புமிக்க அலிப்பூர்துவாரில் இருந்து மேற்கு வங்க மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்வதாகக் கூறினார். இந்தப் பிராந்தியத்தின் வளமான கலாச்சார முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இது அதன் எல்லைகளால் மட்டுமல்ல, அதன் ஆழமான வேரூன்றிய மரபுகள் மற்றும் தொடர்புகளாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அலிப்பூர்துவார் பூட்டானுடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்றும், மறுபுறம் அசாம் அதை வரவேற்கிறது என்றும், ஜல்பைகுரியின் இயற்கை அழகு மற்றும் கூச் பெஹாரின் பெருமை ஆகியவை பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வளமான நிலத்தைப் பார்வையிடுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். இது வங்காளத்தின் பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையில் அதன் பங்கை சுட்டுக் காட்டுகிறது.ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் பீகார் செல்கிறார்
April 23rd, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏப்ரல் 24-ம் தேதி பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2024-ல் பிரதமர் ஆற்றிய உரை
November 16th, 10:15 am
100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்துஸ்தான் டைம்ஸ் வணக்கத்திற்குரிய பாபுவால் தொடங்கப்பட்டது . அவர் குஜராத்தி மொழி பேசுபவர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு குஜராத்தியை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நான், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் கடந்த 100 ஆண்டுகளாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்துடன் தொடர்புடைய அனைவருக்கும், இதை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும், சவால்களை எதிர்கொண்டவர்களுக்கும், உறுதியாக நின்றவர்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இன்று பாராட்டுக்கு உரியவர்கள், மரியாதைக்குரியவர்கள். 100 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்தது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் அனைவரும் இந்த அங்கீகாரத்திற்கு தகுதியானவர்கள், எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 ஆண்டு பயணத்தை காண்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கண்காட்சியைக் காண வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு நேரம் இருந்தால் புறப்படுவதற்கு முன்பு சிறிது நேரம் அங்கு செலவிடுமாறு உங்கள் அனைவரையும் நான் ஊக்குவிக்கிறேன். இது வெறும் கண்காட்சி அல்ல, ஒரு அனுபவம். 100 வருட வரலாறு என் கண் முன்னே கடந்து போனது போல் உணர்ந்தேன். நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் செய்தித்தாள்களைப் பார்த்தேன். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற புகழ்பெற்றவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதி வந்தனர். அவர்களின் எழுத்துக்கள் செய்தித்தாளை மிகவும் வளப்படுத்தின. உண்மையிலேயே, நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சுதந்திரத்திற்காக போராடுவது முதல் சுதந்திரத்திற்குப் பிறகு எல்லையற்ற நம்பிக்கையின் அலைகளில் சவாரி செய்வது வரை, இந்தப் பயணம் அசாதாரணமானது மற்றும் நம்பமுடியாதது. 1947 அக்டோபரில் காஷ்மீரை இணைத்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் அடைந்த உற்சாகத்தை உங்கள் பத்திரிகையில் நான் உணர்ந்தேன். ஏழு தசாப்தங்களாக காஷ்மீர் எவ்வாறு வன்முறையில் மூழ்கியிருந்தது, முடிவெடுக்க முடியாத தன்மை எவ்வாறு இருந்தது என்பதையும் அந்தத் தருணத்தில் நான் உணர்ந்தேன். இன்று உங்கள் செய்தித்தாள் ஜம்மு-காஷ்மீரில் சாதனை வாக்குப்பதிவு பற்றிய செய்திகளை வெளியிடுகிறது, இது கடந்த காலத்திலிருந்து கடுமையாக வேறுபடுகிறது.புதுதில்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 16th, 10:00 am
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாடு 2024-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 ஆண்டுகால பயணத்திற்காக மட்டுமல்லாமல், அது தொடங்கப்பட்டதிலிருந்து அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். கண்காட்சி நடைபெறும் இடத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட திரு மோடி, இது ஒரு அனுபவம் என்று கூறினார். இந்தியா சுதந்திரம் பெற்று, அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தின் பழைய செய்தித்தாள்களை தாம் பார்த்ததாகவும் அவர் கூறினார். மார்ட்டின் லூதர் கிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற பல தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு கட்டுரைகள் எழுதியதை திரு மோடி சுட்டிக்காட்டினார். சுதந்திரப் போராட்டத்தைக் கண்ட நீண்ட பயணம், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபெற்றது தனித்துவமானது மற்றும் ஆச்சரியமானது என்று அவர் கூறினார். 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது குறித்த செய்தியைப் படிக்கும்போது மற்ற குடிமக்களைப் போலவே தாமும் அதே உற்சாகத்தை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். எவ்வாறாயினும், ஏழு தசாப்தங்களாக காஷ்மீரை எவ்வாறு முடிவெடுக்க முடியாத தன்மை வன்முறையில் மூழ்கடித்துள்ளது என்பதையும், அந்தத் தருணத்தில் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இப்போதெல்லாம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். பிரபலமாக விளங்கும் மற்றொரு நாளிதழ், அதன் ஒரு பக்கத்தில் அசாம் கலவரப் பகுதி என்று அறிவிக்கப்பட்டதாகவும், மறுபுறம் அடல் ஜி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிக்கல் நாட்டினார் என்ற செய்தி வெளியிட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார். அசாமில் நிரந்தர அமைதியைக் கொண்டுவருவதில் இன்று பாஜக பெரும் பங்கு வகிக்கிறது என்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு என்று அவர் மேலும் கூறினார்.அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
September 22nd, 10:00 pm
அமெரிக்காவுக்கு வணக்கம் நமது நமஸ்தே உலகளாவிய வகையில் பரவியுள்ளது. இது உங்களால்தான் நடந்துள்ளது. உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. பாரதத்தை உயர்வாக மதிக்கும் ஒவ்வொரு இந்தியனின் வலுவான பாசத்தால் இது சாத்தியமாகியுள்ளது.நியூயார்க்கில் இந்திய சமூகத்தினர் இடையே பிரதமர் உரையாற்றினார்
September 22nd, 09:30 pm
நியூயார்க் லாங் தீவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏராளமான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 15,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Workers of all family-run parties in country are at peak of despair: PM Modi in Kendrapara, Odisha
May 29th, 01:45 pm
Addressing his final rally for the 2024 elections in Odisha, PM Modi addressed a massive gathering in Kendrapara, highlighting the transformative journey ahead for the state. PM Modi expressed his confidence in ushering in a new era of development in Odisha post-June 4th. He said, On June 10th, Odisha will witness the historic oath-taking of the first BJP Chief Minister, who will be a son or daughter of Odisha. He stressed the need for a double-engine government to accelerate Odisha's growth, mirroring the national endorsement of a strong BJP-led government for the third consecutive term.You trusted BJD for 25 years, but it broke your trust at every step: PM Modi in Mayurbhanj, Odisha
May 29th, 01:30 pm
Prime Minister Narendra Modi addressed an enthusiastic public meeting in Mayurbhanj, Odisha with a vision of unprecedented development and transformation for the state and the country. PM Modi emphasized the achievements of the last decade under his leadership and laid out ambitious plans for the next five years, promising continued progress and prosperity for all Indians.