சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

June 28th, 08:24 pm

இப்போது நீங்கள் தாய்நாடான, பாரத பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் பெயரில் மங்களம் இருக்கிறது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இந்த நேரத்தில், நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என் குரல் பிரதிபலிக்கிறது. விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே முதலில் சொல்லுங்கள். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?

பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் உரையாடினார்

June 28th, 08:22 pm

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரான இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சுபன்ஷு சுக்லா தற்போது இந்திய தாய்நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், அவர் அனைத்து இந்தியர்களின் இதயங்களுக்கும் மிக நெருக்கமானவர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சுபன்ஷுவின் பெயரே மங்களகரமானது என்றும், அவரது பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடலாக இருந்தாலும், அது 140 கோடி இந்தியர்களின் உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் உள்ளடக்கியது என்று திரு. மோடி கூறினார். சுபன்ஷுவுடன் பேசிய குரல், முழு நாட்டின் கூட்டு ஆர்வத்தையும் பெருமையையும் சுமந்து சென்றதாகவும், விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக சுபன்ஷுவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சுபன்ஷுவின் நல்வாழ்வு குறித்தும், விண்வெளி நிலையத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்றும் திரு. மோடி விசாரித்தார்.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு

October 15th, 02:23 pm

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) 2024-ல் இந்தியா மொபைல் காங்கிரஸின் 8-வது பதிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (WTSA) என்பது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.