புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:15 am
பரம் ஷ்ரத்தேய ஆச்சார்யா ஸ்ரீ பிரக்யா சாகர் மகாராஜ் ஜி அவர்களே, ஷ்ரவணபெலகோலா சுவாமி சாருகீர்த்தி ஜியின் தலைவர் அவர்களே, என் சக நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, என் சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவீன் ஜெயின் அவர்களே, பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையின் தலைவர் திரு பிரியங்க் ஜெயின் அவர்களே, செயலாளர் திருமிகு மம்தா ஜெயின் அவர்களே, அறங்காவலர் திரு பியூஷ் ஜெயின் அவர்களேஇதர பிரமுகர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, தாய்மார்களே, ஜெய் ஜினேந்திரா!ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 28th, 11:01 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.மகாவீர் பிறந்தநாளில் பகவான் மகாவீரரின் சிந்தனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்
April 10th, 03:30 pm
மகாவீர் பிறந்த நாளை முன்னிட்டு பகவான் மகாவீரரின் காலத்தால் அழியாத போதனைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது சொந்த வாழ்க்கையில் அவரது போதனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.நவ்கார் மகாமந்திர தினத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 09th, 08:15 am
மனம் சாந்தி பெற்றது, மனம் நிலைபெற்றது, அமைதி மட்டுமே, ஒரு அற்புதமான உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது. நவ்கார் மகாமந்திரம் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நவ்கார் மஹாமந்திரத்தின் ஆன்மீக சக்தியை நான் இன்னும் எனக்குள் உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் இதேபோன்ற வெகுஜன மந்திர உச்சாடனத்தை நான் பார்த்தேன். இன்று அதே உணர்வு, அதே ஆழத்துடன் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான புண்ணிய ஆத்மாக்கள் ஒரே உணர்வோடு, வார்த்தைகள் ஒன்றாகப் பேசப்பட்டு, ஒன்றாக எழுப்பப்பட்ட சக்தி உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.நவ்கார் மகாமந்திர தினத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
April 09th, 07:47 am
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நவ்கார் மகாமந்திர தினத்தைத் தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நவ்கார் மந்திரத்தின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை எடுத்துரைத்து, மனதில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் அதன் திறனை எடுத்துரைத்தார். வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கடந்து, ஆழ்மனதிலும் பிரக்ஞையிலும் ஆழமாக எதிரொலிக்கும் அசாதாரண அமைதி உணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார். நவ்கார் மந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, அதன் புனித ஸ்லோகங்களைக் கூறியதுடன், இந்த மந்திரம் ஒன்றுபட்ட ஆற்றல், நிலைத்தன்மை, சமநிலை, சிறந்த உணர்வு, உள் ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது என்று விவரித்தார். தமது சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நவ்கார் மந்திரத்தின் ஆன்மீக சக்தியை அவர் எவ்வாறு தொடர்ந்து உணர்கிறார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இதேபோன்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் தான் பங்கேற்று இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். அது அவர் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கான நல்லொழுக்கமுள்ள ஆத்மாக்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஒன்றிணைந்த இணையற்ற அனுபவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கூட்டு ஆற்றல், ஒருங்கிணைந்த சொற்கள் ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். இது உண்மையிலேயே அசாதாரணமானது எனவும் ஈடு இணையில்லாதது என்றும் அவர் விவரித்தார்.சர்தார்தம் பவன் மற்றும் சர்தார்தம் இரண்டாம் கட்டப் பணிக்கான பூமிபூஜையின் போது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 11th, 11:01 am
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி அவர்களே, துணை முதலமைச்சர் திரு. நிதின் அவர்களே, எனது அமைச்சரவை தோழர்கள் திரு. பர்சோத்தம் ரூபலா, திரு. மன்சுக் மாண்டவியா, அனுப்பிரியா பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினரும் குஜராத் மாநில பிஜேபி தலைவர் திரு. சி.ஆர் பாட்டீல் , குஜராத் மாநில அமைச்சர்கள், சட்ட மன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்தார்தாம் அறக்கட்டளை உறுப்பினர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் தொடங்கி வைத்தார்
September 11th, 11:00 am
சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.எல்லோரும் தடுப்பூசி போட்டு முழுமையான கவனிப்பு எடுத்துக்கொள்ளவேண்டும்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-ன் போது பிரதமர் மோடி
April 25th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மனைவரின் பொறுமையையும், துன்பத்தைத் தாங்கும் திறனையும் கொரோனாவானது சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. நமக்கு உற்றவர்கள் பலர் அசந்தர்ப்பமான வேளையில் நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். கொரோனாவின் முதல் அலையை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், தேசத்தின் மனோநம்பிக்கை பொங்கிக் கொண்டிருந்தது, தன்னம்பிக்கை நிரம்பி இருந்தது, ஆனால் இந்தச் சூறாவளியானது தேசத்தை உலுக்கி விட்டிருக்கிறது.ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நவம்பர் 16-ம் தேதி ‘ அமைதி சிலை’யை பிரதமர் திறந்து வைக்கிறார்
November 14th, 06:06 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி , நவம்பர் 16, 2020 அன்று பகல் 12.30 மணிக்கு, ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ‘ அமைதி சிலை’யை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.