மகாத்மா அய்யன்காளியின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை
August 28th, 03:45 pm
சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் நீடித்த சின்னமாக மகாத்மா அய்யன்காளியை நினைவுகூர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மனமார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்திற்கான மகாத்மா அய்யன்காளியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை திரு மோடி எடுத்துரைத்துள்ளார். அவரது மரபு மற்றும் பாரம்பரியம், நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை நோக்கிய கூட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.அகமதாபாத்தில் உள்ள கன்யா சத்ராலயாவில் உள்ள சர்தார்தாம் கட்டம்-II -ன் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 24th, 10:39 pm
இன்று மகள்களின் சேவைக்காகவும் அவர்களின் கல்விக்காகவும் ஒரு விடுதி திறக்கப்படுகிறது. இந்த விடுதியில் தங்கும் மகள்களுக்கு ஆசைகளும் கனவுகளும் இருக்கும், அவற்றை நிறைவேற்ற அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், இந்த மகள்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று திறமையானவர்களாக மாறும்போது, அவர்கள் இயல்பாகவே தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள், மேலும் அவர்களின் குடும்பங்களும் செழிக்கும்.நாடு முழுவதும் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் சாதனை அளவில் நடைபெற்று வருகிறது: பிரதமர்
August 24th, 10:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாதில் கன்யாசத்ராலயாவில் இரண்டாம் கட்ட சர்தார்தாம் திட்டப்பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டி உரையாற்றினார். சர்தார்தாம் என்ற பெயர் தியாகத்துடன் கூடிய பணிகளைக் குறிக்கும் வகையில் உள்ளது என்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சேவைக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ள தங்கும் விடுதியை அவர் தொடங்கி வைத்தார். கனவுகள் மற்றும் விருப்பங்களைச் சுமந்து இந்த விடுதியில் தங்கவுள்ள சிறுமிகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று கூறினார். தற்சார்பு மற்றும் திறனுள்ள சிறுமிகள் நாட்டைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றுவதுடன் அவர்களின் குடும்பங்களும் முன்னேற்றம் அடையும் என்று குறிப்பிட்டார். இந்த தங்கும் விடுதியில் இடம் கிடைத்துள்ள சிறுமிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.கோடை விடுமுறையை வளர்ச்சிக்கும், கற்றலுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் மனங்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்
April 01st, 12:05 pm
கோடை விடுமுறையைக் கொண்டாடுகின்ற நாடு முழுவதும் உள்ள இளம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த நேரத்தை மகிழ்ச்சிக்காகவும், கற்றலுக்காகவும், சொந்த வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.