கர்நாடகா மற்றும் கோவாவுக்கு நவம்பர் 28 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

November 27th, 12:04 pm

கர்நாடகா மற்றும் கோவாவுக்கு நவம்பர் 28 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்திற்கு நவம்பர் 28 காலை 11.30 மணி அளவில் பிரதமர் செல்லவிருக்கிறார். பின்னர் அன்று பிற்பகல் 3.15 மணிக்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோக்கரன் பர்த்தகலி ஜீவோட்டம் மடத்திற்குச் செல்வார். அங்கு இம்மடத்தின் 550-வது ஆண்டினைக் கொண்டாடும் சார்தா பஞ்சாஷ்டமனோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பார்.