The fact sheet on India's growth is a success story of the Reform-Perform-Transform mantra: PM Modi in Rajkot
January 11th, 02:45 pm
PM Modi inaugurated the Vibrant Gujarat Regional Conference for the Kutch and Saurashtra region in Rajkot. Recalling the devastating earthquake in Kutch and drought in Saurashtra, the PM said these regions are now emerging as major drivers of Aatmanirbhar Bharat and India’s rise as a global manufacturing hub. He highlighted the achievements India has made over the past 11 years.ராஜ்கோட்டில் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியங்களுக்கான துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 11th, 02:30 pm
குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று (11.01.2026) நடைபெற்ற கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் பிராந்திய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, 2026-ம் ஆண்டின் தொடக்கத்திற்குப் பிறகு, குஜராத்துக்கு தமது முதல் பயணம் என்று குறிப்பிட்டார். காலையில் சோம்நாத்தின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாகவும், இப்போது ராஜ்கோட்டில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதாகவும் அவர் கூறினார்.The new Safran facility will help establish India as a global MRO hub: PM Modi during the inauguration of SAESI in Hyderabad, Telangana
November 26th, 10:10 am
During the inauguration of the Safran Aircraft Engine Services India facility in Hyderabad, PM Modi remarked that the new establishment will strengthen India’s emergence as a global MRO hub. Highlighting the employment opportunities, it will create for the youth of South India, he noted that the facility will give fresh momentum to the entire MRO ecosystem. The PM said that India considers investors as co-creators and stakeholders in the journey towards a developed India.ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
November 26th, 10:00 am
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா - சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ) மையமாக நிலைநிறுத்த உதவும் என்றார். இந்த எம்ஆர்ஓ மையம் உயர் தொழில்நுட்ப விண்வெளித் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். சஃப்ரான் வாரியம் மற்றும் நிர்வாகத்தை நவம்பர் 24 அன்று சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னதாக அவர்களுடனான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியா குறித்த அவர்களின் நம்பிக்கையைத் தாம் கண்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சஃப்ரானின் முதலீடு இதே வேகத்தில் தொடரும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார். இந்தப் புதிய நிறுவனத்திற்காக சஃப்ரான் குழுவிற்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.