புதுதில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து பேசிய பிரதமர் உரையின் தமிழாக்கம்
August 11th, 11:00 am
திரு ஓம் பிர்லா அவர்களே, திரு மனோகர்லால் அவர்களே, கிரண் ரிஜிஜூ அவர்களே, திரு மகேஷ் ஷர்மா அவர்களே, அனைத்து மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, மக்களவை தலைமைச் செயலர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்
August 11th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பை (வகைப்பாடு-VII) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் கடமைப் பாதையில் பொது மத்திய செயலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை திறந்து வைத்ததை சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் உள்ள நான்கு சிறந்த நதிகளின் பெயரில் அதாவது, கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என்ற பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் நதிகளை நினைவு கூரும் வகையில், இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையின் பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில், நதிகளின் பெயர்களை வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். தில்லியில் வசித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த புதிய குடியிருப்பு வளாகம், உறுப்பினர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசின் குடியிருப்பு வசதிகள் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், இந்த குடியிருப்பு வளாக கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.எங்களுக்கு நல்ல அரசியல் மற்றும் நல்ல ஆட்சி வேண்டும்: கட்டாக்கில் பிரதமர் மோடி
May 26th, 06:16 pm
தேசிய ஜனநாயக கூட்டணியின் நான்கு ஆண்டுகளில் ஒடிசா மற்றும் கட்டாக்கில் நடைபெறும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகையில் பா.ஜ.க. ஒரு சிறந்த கட்சியாக மாறியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சி ஆகிய இரண்டும் நல்ல அரசியல் ஆகும்: கட்டாக்கில் பிரதமர் மோடி
May 26th, 06:15 pm
தேசிய ஜனநாயக கூட்டணியின் நான்கு ஆண்டுகளில் ஒடிசா மற்றும் கட்டாக்கில் நடைபெறும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகையில் பா.ஜ.க. ஒரு சிறந்த கட்சியாக மாறியுள்ளது. இது பஞ்சாயத்து முதல் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளது.Congress does not care about ‘dil’, they only care about ‘deals’: PM Modi
May 06th, 11:55 am
Addressing a massive rally at Bangarapet, PM Modi said these elections were not about who would win or lose, but, fulfilling aspirations of people. He accused the Karnataka Congress leaders for patronising courtiers who only bowed to Congress leaders in Delhi not the aspirations of the people.கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி
May 06th, 11:46 am
சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட் மற்றும் ஹுப்ளி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். கர்நாடக மக்களின் நலனைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய மாட்டார்கள். பாஜக மீது மக்கள் காட்டும் உற்சாகம், காங்கிரசை தூக்கி எறிவதற்கான அறிகுறி” என்கிறார் பிரதமர் மோடி.கிருஷ்ணா நதியில் படகு கவிழ்வு – பிரதமர் இரங்கல்
November 13th, 10:01 am
கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.