Today’s projects will play a pivotal role in fulfilling our resolve for a 'Viksit Keralam': PM Modi in Ernakulam

March 11th, 02:00 pm

PM Modi launched development projects worth around ₹11,000 crore in Ernakulam, Keralam, and extended his congratulations to the people of Keralam on these initiatives. The projects cover sectors such as petroleum, floating solar power, regional connectivity and road infrastructure. He expressed his firm belief that these multi-sectoral projects are essential building blocks for the state’s prosperous future.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரூ 11,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

March 11th, 01:30 pm

கேரளாவின் பரபரப்பு வாய்ந்த கடலோர நகரமான கொச்சிக்கு இன்று சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு அதிகளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறுத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததன் மூலம், அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிக முதலீடுகளுக்கான அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ரூ 11,000 கோடி மதிப்பிலான பல்வேறுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்றக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கொச்சிக்கு வருவது எப்போதுமே ஒரு அற்புதமான அனுபவம் என்று குறிப்பிட்டார், இந்த திட்டங்களுக்காக கேரள மாநில மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

மார்ச் 11 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

March 09th, 09:54 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மார்ச் 11, 2026 அன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். பிற்பகல் 1:30 மணியளவில், கேரளாவின் எர்ணாகுளத்தில் சுமார் 10,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார். அதன் பிறகு மாலை சுமார் 5:45 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.