கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 13th, 03:55 pm

ஸ்ரீ கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ், அவரது திரைத் துறைத் திறமைக்காகவும் பல்துறைத்திறனுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவர் தமது அற்புதமான நடிப்பால் தலைமுறை தலைமுறையாக ரசிகர்களை கவர்ந்தார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். சமூக சேவையிலும் கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் முன்னணியில் இருந்தார் எனவும் ஏழைகள், நலிந்தவர்கள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கப் பாடுபட்டார் என்றும் திரு நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளார்.