ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் தற்போதுள்ள இருவழி பாதைகளின் இருமருங்கிலும் அணுகு சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
December 31st, 03:11 pm
ஒடிசாவில் தேசிய நெடுஞ்சாலை 326-ல் தற்போதுள்ள இருவழி பாதைகளின் இருமருங்கிலும் அணுகு சாலை அமைப்பதோடு, அவற்றை பலப்படுத்தவும், விரிவுபடுத்தவுமான திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.கோராபுட் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க பிரதமர் அனுமதி
February 01st, 06:01 pm
ஒடிசா மாநிலம் கோராபுட் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஒடிசா கோராபுட் விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
February 01st, 09:48 am
ஒடிசா கோராபுட் பகுதியில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.