2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 03:35 pm
தோஹாவில் நடைபெற்ற 2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டியில் அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 29th, 06:00 am
2025 FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், கிராண்ட்மாஸ்டரான திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் மேலும் பிரபலமடைய பங்களிக்கும் என்று திரு. மோடி கூறினார்.ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து
July 28th, 06:29 pm
ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொனேரு ஹம்பியும், இப்போட்டி முழுவதும் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இரு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமரைச் சந்தித்தார்
January 03rd, 08:42 pm
செஸ் சாம்பியன் கொனேரு ஹம்பி பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவிற்கு மிகுந்த பெருமையைத் தேடித் தந்ததற்காக அவரைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது கூர்மையான அறிவாற்றல், அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவை தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டார்.