In India, democracy means last mile delivery: PM Modi at 28th CSPOC
January 15th, 11:00 am
In his address while inaugurating the 28th CSPOC at the Central Hall of Samvidhan Sadan, PM Modi highlighted India’s democratic journey. Remarking that India is the mother of democracy, the PM noted the increasing representation of women in government bodies and persity of Indian languages. He further highlighted that India has begun using AI in Parliament to improve its functioning.காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 15th, 10:32 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அவைத் தலைவரின் பங்கு தனித்துவமானது என்று குறிப்பிட்டார். அவைத் தலைவர் அதிகம் பேச வாய்ப்பில்லை என்றாலும், அவர்களின் பொறுப்பு மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதும், அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை உறுதி செய்வதும் ஆகும் என்பதை அவர் எடுத்துரைத்தார். கூச்சல் எழுப்பும் உறுப்பினர்களைக் கூட புன்னகையுடன் கையாள்வது அவைத் தலைவர்களின் பொதுவான பண்பு என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகாராஜின் 500-வது புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் தமிழாக்கம்
January 11th, 01:00 pm
இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், எங்கள் உத்வேகத்தின் ஆதாரமான மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை நான் முதலில் வணங்குகிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 11th, 12:44 pm
ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை இன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்த புனிதமான தருணத்தில் முதலில் மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை வணங்கி மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.நற்பண்பு, குணம், அறிவு மற்றும் வளம் போன்ற காலத்தால் அழியாத விழுமியங்களை உணர்த்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
January 07th, 09:49 am
இந்திய பாரம்பரியத்தின் நீடித்த ஞானம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நாட்டின் வாழ்வியல் மற்றும் தனிமனித நடத்தையை தொடர்ந்து வழிநடத்தும் விழுமியங்கள் குறித்து அவர் வலியுறுத்தினார்.சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
January 03rd, 08:07 am
இன்று சாவித்திரிபாய் ஃபுலேயின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, சேவை மற்றும் கல்வி மூலம் சமூக மாற்றத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முன்னோடியான சமூக சீர்திருத்தவாதியை நினைவுகூர்ந்துள்ளார்.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
January 01st, 05:39 pm
ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள் என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார்.இந்தியாவின் பாரம்பரிய மற்றும் மதிப்புமிகுந்த மரபுகளை ஊக்குவிக்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி அமைந்துள்ளது: பிரதமர்
December 08th, 11:33 am
காலை நேரம் புத்துணர்வுடன் தொடங்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் ஒளிபரப்பப்படுவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய வாழ்வியல் முறைகளுடன் தொடர்புடைய யோகா முதல் பல்வேறு விதமான கருப்பொருள்களுடன் கூடிய பன்முகத்தன்மை கொண்ட நிகழ்ச்சிகளை இந்த தொலைக்காட்சி தொகுத்து வழங்குகிறது.ஜி20 உச்சிமாநாட்டின் முதல் அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 22nd, 09:36 pm
இந்த ஜி20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கும், வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் இந்த ஆண்டு தலைமைத்துவம் வகிக்கும் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் திரு ரமபோசாவுக்கும் எனது வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.Prime Minister participates in G20 Summit in Johannesburg
November 22nd, 09:35 pm
Prime Minister participated today in the G20 Leaders’ Summit hosted by the President of South Africa, H.E. Mr. Cyril Ramaphosa in Johannesburg. This was Prime Minister’s 12th participation in G20 Summits. Prime Minister addressed both the sessions of the opening day of the Summit. He thanked President Ramaphosa for his warm hospitality and for successfully hosting the Summit.Sri Sathya Sai Baba placed Seva at the very heart of human life: PM at Puttaparthi in Andhra Pradesh
November 19th, 11:00 am
PM Modi addressed the birth centenary celebrations of Sri Sathya Sai Baba in Puttaparthi, calling it an emotional and spiritual experience. He offered tributes at Baba’s Samadhi and said Baba’s teachings, love, and spirit of service continue to guide millions across the world. Shri Modi highlighted Baba’s message of Vasudhaiva Kutumbakam and noted that the centenary year has become a global festival of love, peace, and service. He also underscored that Seva is the core of Indian civilisation, uniting the paths of Bhakti, Gyan, and Karma.ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 19th, 10:30 am
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார்.மங்கோலிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்
October 14th, 01:15 pm
ஆறு ஆண்டுகளுக்குப் பின் மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகச் சிறப்பான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-மங்கோலியா தூதரக உறவுகளின் எழுபது ஆண்டுகளையும், பாதுகாப்பு கூட்டாண்மையின் பத்து ஆண்டுகளையும் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் எங்களின் பகிரப்பட்ட பாரம்பரிய, பன்முகத்தன்மை கொண்ட, வலுவான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் கூட்டாக அஞ்சல் தலையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 07th, 09:15 am
வால்மீகி ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.When the strength of the youth increases, the nation grows stronger: PM Modi
October 04th, 10:45 am
PM Modi launched various youth-focused initiatives worth over ₹62,000 crore during the Kaushal Deekshant Samaroh in New Delhi. He highlighted several schemes and projects dedicated to the youth of Bihar and announced the launch of the PM SETU scheme. Expressing satisfaction that Bihar has received a new Skill University, the PM noted that it has been named after Bharat Ratna Jananayak Karpoori Thakur.இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
October 04th, 10:29 am
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பீகார் மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தும் புதிய பாரம்பரியத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடங்கியதை நினைவு கூர்ந்தார்.India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi
September 12th, 04:54 pm
In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
September 12th, 04:45 pm
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.செப்டம்பர் 12 அன்று புதுதில்லியில் ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்
September 11th, 04:57 pm
செப்டம்பர் 12-ம் தேதி மாலை 4:30 மணிக்கு புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்வார். கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல்மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் பொது அணுகலை விரைவுப்படுத்துவதற்கான ஞான பாரதம் டிஜிட்டல் தளத்தையும் பிரதமர் அறிமுகப்படுத்திவைத்து நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 04th, 05:35 pm
நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.