தேசிய விளையாட்டு தினத்தன்று பீகாரின் ராஜ்கிரில் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 28th, 09:33 pm
பீகாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ராஜ்கிரில் நாளை (ஆகஸ்ட் 29, 2025) ஆடவர் ஹாக்கி ஆசியக் கோப்பை 2025 போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு, ஆசியா முழுவதிலும் இருந்து இதில் பங்கேற்கும் அணிகள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2025, 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் 2025, ஐஎஸ்டிஏஎஃப் செபக் தக்ரா உலகக் கோப்பை 2024 மற்றும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 போன்ற முக்கிய போட்டிகளை நடத்தி, சமீப காலங்களில் துடிப்பான விளையாட்டு மையமாக முத்திரை பதித்துள்ள பீகார் மாநிலத்தை திரு மோடி பாராட்டினார்.7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை
May 04th, 08:16 pm
பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மன்சுக் அவர்களே, சகோதரி ரக்ஷா காட்சே அவர்களே, திரு ராம் நாத் தாக்கூர் அவர்களே, பீகார் துணை முதலமைச்சர்கள், திரு சாம்ராட் சவுத்ரி அவர்களே, திரு விஜய் குமார் சின்ஹா அவர்களே மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களே, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் பணியாளர்களே எனது அன்பான இளம் நண்பர்களே!7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 04th, 08:02 pm
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது பீகாரில் உள்ள பல நகரங்களிலும் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகள் குறித்து எடுத்துரைத்த திரு மோடி, வரும் நாட்களில், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளையும் விருப்பங்களையும் ஏந்திச் செல்வார்கள் என்று குறிப்பிட்டார். அனைத்து வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நாட்டில் விளையாட்டு தற்போது ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளமாகப் பரிணமித்து வருகிறது என்றும் கூறினார்.உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
January 28th, 11:30 am
நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.Organization of mega sporting events is crucial for making India a top sporting nation: PM
January 19th, 06:33 pm
Prime Minister Narendra Modi inaugurated the opening ceremony of the Khelo India Youth Games 2023 in Chennai, Tamil Nadu. Addressing the gathering, the Prime Minister welcomed everyone to the 13th Khelo India Games and said that it is a great way to begin 2024. He said that the people gathered on the occasion represent a young India, a new India whose energy is taking the country to new heights in the world of sports. He extended his best wishes to all athletes and sports lovers who have arrived in Chennai from across the country.தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
January 19th, 06:06 pm
தமிழ்நாட்டின் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (19-01-2024) கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். சுமார் ரூ. 250 கோடி மதிப்பிலான தகவல் ஒலிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கலை நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவைக் குறிக்கும் வகையில் இரண்டு விளையாட்டு வீரர்கள் வழங்கிய விளையாட்டு ஜோதியை அவர் பெற்றுக் கொண்டார்.