Cabinet approves revamped Khelo India Scheme and enhanced Assistance to National Sports Federations (ANSFs)
July 31st, 04:15 pm
The Union Cabinet chaired by PM Modi has approved an expanded Khelo India Scheme and enhanced Assistance to National Sports Federations (ANSFs) with a combined outlay of Rs.36,441 crore for the period 2026-27 to 2030-31. Aligned with the vision of Khelo Bharat Niti 2025 and the NEP 2020, the scheme integrates sports with education, fitness, technology and high-performance training.எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 23rd, 10:10 pm
உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன். இந்த கூட்டம் நடத்தப்படும் நேரம் மிகவும் சரியானது. எனவே நான் அதைப் பாராட்டுகிறேன். கடந்த வாரம்தான், செங்கோட்டையிலிருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினேன். இப்போது இந்த மன்றம் அந்த உணர்வின் பலத்தைப் பெருக்குவதாகச் செயல்படுகிறது.புது தில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 23rd, 05:43 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் பிரதமர் வரவேற்றார். இந்த மன்றக் கூட்டத்தை நடத்த மிகவும் சரியான நேரம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இதற்காக ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். கடந்த வாரம் தான் செங்கோட்டையில் இருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியதை அவர் எடுத்துரைத்தார். மேலும் இந்த மன்றம் இப்போது அந்த உணர்வைப் பெருக்கும் சக்தியாகச் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.