சத் பூஜையின் புனித கர்ணா சடங்குக்கு பிரதமர் வாழ்த்து

October 26th, 10:44 am

சத் பண்டிகை சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க சடங்கான ‘கர்ணா’வின் புனித நிகழ்வை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புனித பண்டிகையுடன் தொடர்புடைய கடுமையான விரதங்கள் மற்றும் சடங்குகளைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அவர் மரியாதை செலுத்தியுள்ளார்.