மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

October 02nd, 11:36 pm

மத்தியப் பிரதேசம் மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.