வாரணாசியிலிருந்து நான்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 08th, 08:39 am
உத்தரப்பிரதேசத்தின் துடிப்பான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக ஊழியர் மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைத்து வரும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு தலைமை தாங்குபவரான அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, எர்ணாகுளத்திலிருந்து தொழில்நுட்பம் மூலம் எங்களுடன் இணையும் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் அவர்களே, கேரளாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளே,பிரதமர் திரு நரேந்திர மோடி, வாரணாசியில், நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்
November 08th, 08:15 am
இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று, பாபா விஸ்வநாதரின் புனித நகரமான வாரணாசியின் அனைத்து குடும்பங்களுக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். தேவ் தீபாவளிப் பண்டிகையின் போது காணப்பட்ட அசாதாரண கொண்டாட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், மேலும் இன்று ஒரு நல்ல தருணம் அமைத்திருக்கிறது என்றும், இந்த வளர்ச்சிக்கானத் திருவிழாவையொட்டி அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் கென் - பெட்வா நதிகளை இணைக்கும் தேசிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 25th, 01:00 pm
மாவீரர்களின் பூமியான பண்டேல்கண்ட் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய பிரதேசத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு மங்குபாய் படேல் அவர்களே, முதல்வர் திரு மோகன் யாதவ் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு சிவராஜ் சிங், திரு வீரேந்திர குமார் மற்றும் திரு சிஆர் பாட்டீல் அவர்களே, துணை முதல்வர் திரு ஜெகதீஷ் தேவ்தா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதன்பு சகோதர சகோதரிகளே.மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
December 25th, 12:30 pm
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்திய, உலக கிறிஸ்தவ சமூகத்தினருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, வளர்ச்சிப் பணிகளும் வேகம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க கென்-பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமான தௌதான் அணைக்கட்டு, மத்தியப் பிரதேசத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையமான ஓம்கரேஷ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டம் ஆகியவற்றுக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இதற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.