Cabinet approves three new corridors as part of Delhi Metro’s Phase V (A) Project
December 24th, 03:25 pm
The Union Cabinet approved three new corridors - 1. R.K Ashram Marg to Indraprastha (9.913 Kms), 2. Aerocity to IGD Airport T-1 (2.263 kms) 3. Tughlakabad to Kalindi Kunj (3.9 kms) as part of Delhi Metro’s Phase – V(A) project consisting of 16.076 kms which will further enhance connectivity within the national capital. Total project cost of Delhi Metro’s Phase – V(A) project is Rs.12014.91 crore, which will be sourced from Government of India, Government of Delhi, and international funding agencies.துவாரகா விரைவுச் சாலை மற்றும் நகர விரிவாக்க சாலை-II திட்டங்களின் தில்லி பிரிவைத் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 17th, 12:45 pm
எனது அமைச்சரவை நண்பர் திரு நிதின் கட்கரி அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி அவர்களே, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் சக்சேனா அவர்களே, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திரு ஹர்ஷ் மல்கோத்ரா அவர்களே, தில்லி மற்றும் ஹரியானாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில அமைச்சர்களே, இதர பிரதிநிதிகளே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே,பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்
August 17th, 12:39 pm
தில்லியின் ரோஹிணியில் சுமார் ₹11,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.08.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், விரைவுச் சாலையின் பெயர் துவாரகா என்றும், நிகழ்ச்சி ரோஹிணியில் நடைபெறுவதாகவும் கூறி, அந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். ஜென்மாஷ்டமிப் பண்டிகையின் உணர்வை எடுத்துரைத்த அவர், துவாரகாவில் இந்த நிகழ்வு நடைபெறுவது தற்செயல் நிகழ்வாகும் என்றும் குறிப்பிட்டார். முழு நிகழ்வும் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியால் நிரம்பி இருப்பதாகப் பிரதமர் கூறினார்.புதுதில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்து பேசிய பிரதமர் உரையின் தமிழாக்கம்
August 11th, 11:00 am
திரு ஓம் பிர்லா அவர்களே, திரு மனோகர்லால் அவர்களே, கிரண் ரிஜிஜூ அவர்களே, திரு மகேஷ் ஷர்மா அவர்களே, அனைத்து மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களே, மக்களவை தலைமைச் செயலர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்
August 11th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பை (வகைப்பாடு-VII) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் கடமைப் பாதையில் பொது மத்திய செயலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை திறந்து வைத்ததை சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் உள்ள நான்கு சிறந்த நதிகளின் பெயரில் அதாவது, கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என்ற பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் நதிகளை நினைவு கூரும் வகையில், இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையின் பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில், நதிகளின் பெயர்களை வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். தில்லியில் வசித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த புதிய குடியிருப்பு வளாகம், உறுப்பினர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசின் குடியிருப்பு வசதிகள் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், இந்த குடியிருப்பு வளாக கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.புதுதில்லி கடமைப்பாதையில் கடமை மாளிகை தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 06th, 07:00 pm
மத்திய அமைச்சரவையின் சகாக்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசு ஊழியர்களே, சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற கடமை மாளிகையின் திறப்பு விழாவில் உரையாற்றினார்
August 06th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற கடமை மாளிகை -3-ன் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக ,புரட்சி மாதமான ஆகஸ்ட், மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொடர்புடைய முக்கிய சாதனைகளை இந்தியா ஒன்றன் பின் ஒன்றாகக் காண்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். புதுதில்லியைப் பற்றி குறிப்பிட்டு, கடமைப் பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத மண்டபம், யசோபூமி, தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் இப்போது கடமை மாளிகை போன்ற சமீபத்திய உள்கட்டமைப்பு அடையாளங்களை திரு மோடி பட்டியலிட்டார். இவை வெறும் புதிய கட்டிடங்கள் அல்லது வழக்கமான உள்கட்டமைப்பு அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவை வடிவமைக்கும் கொள்கைகள் இந்தக் கட்டமைப்புகளிலேயே வகுக்கப்படும் என்றும், வரும் தசாப்தங்களில், இந்த இடங்களிலிருந்தே நாட்டின் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். கடமை மாளிகையின் திறப்பு விழாவிற்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.பிரதமர் கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார்
August 06th, 12:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது பொதுச் சேவைக்கான தொடர் முயற்சிகள் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று அவர் குறிப்பிட்டார்.பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்
August 04th, 05:44 pm
தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.