ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் வளர்ச்சிப் பணிகளின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 22nd, 12:00 pm
ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடே அவர்களே, மாநில முதல்வர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதல்வர் சகோதரி வசுந்தரா ராஜே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி அவர்களே, பிரேம் சந்த் அவர்களே, ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் மதன் ரத்தோர் அவர்களே, இதர நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, என் அன்பான சகோதர, சகோதரிகளே.ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்
May 22nd, 11:30 am
ராஜஸ்தானின் பிகானிரில் 26,000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்து, வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், பெருமளவில் திரண்டிருந்தோரை வரவேற்றார். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து இணையதளம் வழியாக குறிப்பிடத்தக்க அளவில் பங்கேற்றவர்களையும் வரவேற்றார். பல ஆளுநர்கள், முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பையும் அவர் எடுத்துரைத்தார். நாடு முழுவதிலுமிருந்து இந்த நிகழ்வில் இணைந்த அனைத்து பிரமுகர்களுக்கும், குடிமக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.பிரதமர் மே 22 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார்
May 20th, 01:06 pm
காலை 11:30 மணியளவில், அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட தேஷ்னோக் நிலையத்தையும், பிகானிர்-மும்பை விரைவு ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து, பலானாவில் ரூ.26,000 கோடிக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.