வேலைவாய்ப்புத் திருவிழாவில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:15 am
இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். இன்று 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். நீங்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான, பொறுப்புள்ள பங்காளிகளாக மாறுகிறீர்கள். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்கப் போகிறீர்கள். வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நீங்கள் மிக முக்கியப் பங்காற்றுவீர்கள்.வேலைவாய்ப்பு முகாமின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை வழங்கினார்
May 23rd, 11:00 am
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று விவரித்தார். அரசு சேவையில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற அவர், ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்களின் உடனடி பங்களிப்பை வலியுறுத்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில், வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று திரு மோடி கூறினார்.வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அக்டோபர் 29 அன்று பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்குகிறார்
October 28th, 01:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு 51,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை 2024 அக்டோபர் 29 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.