மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு பிரதமர் வருகை
March 02nd, 08:32 pm
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து, குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவிலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார். இந்தக் கோவில் நமது கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜூலை 12-ஆம் தேதி தியோகர் மற்றும் பாட்னா செல்கிறார் பிரதமர்
July 09th, 09:35 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜூலை 12, 2022 அன்று தியோகர் மற்றும் பாட்னா செல்லவிருக்கிறார். பகல் 1:15 மணிக்கு தியோகரில் ரூ. 16000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2:40 மணிக்கு 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான பாபா வைத்தியநாத் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் பூஜை செய்வார். பிறகு மாலை 6 மணியளவில் பாட்னாவில் பிகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றுவார்.