சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 13th, 12:54 pm
சிலி அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் அன்டோனியோ கஸ்த் ரிஸ்ட்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – சிலி இடையே இனிய நட்பு ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், அவருடன் நெருக்கமாகப் பணியாற்றுவதை தாம் எதிர்நோக்கி இருப்பதாக திரு மோடி கூறியுள்ளார். “வெற்றிகரமான பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்!” என்று திரு மோடி கூறியுள்ளார்.