கனடா பிரதமர் இந்தியா வருகிறார்

February 26th, 10:40 am

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் திரு மார்க் கார்னி, நாளை (2026 பிப்ரவரி 27) முதல் 2026 மார்ச் 2 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்தியாவுக்கான முதல் அரசு முறைப் பயணமாகும். பிப்ரவரி 27 அன்று, கனடா பிரதமர் திரு மார்க் கார்னி மும்பை வந்தடைகிறார். அங்கு இரண்டு நாட்கள் அவர் பல்வேறு, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய – கனடா தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், புதுமை கண்டுப்பிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் அங்கு கலந்துரையாடவுள்ளார்.

ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமரைச் சந்தித்துப் பேசினார்

November 23rd, 09:44 pm

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமிகு ஜார்ஜியோ மெலோனி-ஐ சந்தித்துப் பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

ஜி20 உச்சிமாநாட்டின் 3-வது அமர்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

November 23rd, 04:05 pm

தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அது தொடர்பான வாய்ப்புகள், வளங்கள் இரண்டும் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும், முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கு கவலை அளிக்கும் விஷயம். மேலும் இது புதுமைக்கும் ஒரு தடையாக அமைகிறது. இதை நிவர்த்தி செய்ய, நமது அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' என்ற தலைப்பில் ஜி20 அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

November 23rd, 04:02 pm

'அனைவருக்கும் நியாயமான, நிலையான எதிர்காலம்' - முக்கிய கனிமங்கள்; சிறந்த வேலை; செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வில் பிரதமர் உரையாற்றினார். முக்கியமான தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படும் விதத்தில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்தகைய தொழில்நுட்ப பயன்பாடுகள் நிதியை மையமாக கொண்டு இல்லாமல் 'மனிதத்தை மையமாக கொண்டும், குறிப்பிட்ட நாட்டை மையமாகக் கொண்டு அல்லாமல் உலகளாவிய வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த தொலைநோக்குப் பார்வை இந்தியாவின் தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விண்வெளி பயன்பாடுகள், டிஜிட்டல் பரிவர்த்தனை என அனைத்திலும் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், உலக அளவில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபரைச் சந்தித்தார்

November 23rd, 02:18 pm

ஜொகன்னஸ்பர்கில் இன்று (23.11.2025) நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு இடையே தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமர், தென்னாப்பிரிக்க அதிபர் திரு ராமபோசாவுக்கு நன்றி தெரிவித்தார். புது தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்ல தென்னாப்பிரிக்க மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

Prime Minister participates in G20 Summit in Johannesburg

November 22nd, 09:35 pm

Prime Minister participated today in the G20 Leaders’ Summit hosted by the President of South Africa, H.E. Mr. Cyril Ramaphosa in Johannesburg. This was Prime Minister’s 12th participation in G20 Summits. Prime Minister addressed both the sessions of the opening day of the Summit. He thanked President Ramaphosa for his warm hospitality and for successfully hosting the Summit.

Prime Minister meets Prime Minister of Australia on the sidelines of the G20 Leaders’ Summit

November 21st, 10:43 pm

PM Modi met Australian PM Anthony Albanese on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg, South Africa. The two leaders discussed strengthening bilateral cooperation across a wide range of areas and renewed their commitment to take the India-Australia Comprehensive Strategic Partnership to greater heights. PM Albanese condemned the recent terror attack in India.

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வந்தடைந்தார் பிரதமர் மோடி

November 21st, 06:25 pm

சிறிது நேரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார், மேலும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

November 19th, 10:42 pm

20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 21-23 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கிற்கு வருகை தருவார். உச்சிமாநாட்டு அமர்வுகளின் போது, ​​ஜி20 நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் முன்னோக்குகளை பிரதமர் முன்வைப்பார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார், மேலும் தென்னாப்பிரிக்கா நடத்தும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

August 28th, 06:59 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

August 25th, 12:12 am

ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

"பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா தொடர்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டணியில் புதிதாக இணையும் நாடுகளுடனான உரையாடலின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்"

August 24th, 02:38 pm

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த அதிபர் ரமஃபோசாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

August 23rd, 08:57 pm

23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் தலைமையில் நடைபெற்ற 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

August 23rd, 07:36 pm

இப்படி ஒரு வரலாறு நம் கண்முன்னே படைக்கப்படுவதைப் பார்க்கும்போது, வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுகிறது. இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் ஒரு தேசத்தின் வாழ்வின் நித்திய உணர்வாக மாறுகின்றன. இந்தத் தருணம் மறக்க முடியாதது. இந்தத் தருணம் முன்னெப்போதும் இல்லாதது. இந்தத் தருணம் வளர்ந்த இந்தியாவின் வெற்றி முழக்கம். இந்தத் தருணம் புதிய இந்தியாவின் வெற்றி. இந்த தருணம் கஷ்டங்களின் கடலை கடப்பது பற்றியது. இந்தத் தருணம் வெற்றிப் பாதையில் நடப்பது பற்றியது. இந்தத் தருணம் 1.4 பில்லியன் இதயத் துடிப்புகளின் திறனைக் கொண்டுள்ளது. இந்தத் தருணம் இந்தியாவில் புதிய ஆற்றலையும், புதிய நம்பிக்கையையும், புதிய உணர்வையும் குறிக்கிறது. இந்தத் தருணம் இந்தியாவின் உயரிய தலைவிதியின் அறைகூவல். 'அமிர்த கால' விடியலில் வெற்றியின் முதல் வெளிச்சம் இந்த ஆண்டு பொழிந்துள்ளது. நாம் பூமியில் ஒரு உறுதிமொழி எடுத்தோம், அதை சந்திரனில் நிறைவேற்றினோம். நமது அறிவியல் சகாக்களும், இந்தியா இப்போது சந்திரனில் உள்ளது என்று கூறினார்கள். இன்று, விண்வெளியில் புதிய இந்தியாவின் புதிய பறப்பை நாம் கண்டோம்.

சந்திரயான் 3 தரையிறங்குவதைக் காண இஸ்ரோ குழுவில் காணொலி மூலம் இணைந்தார் பிரதமர்

August 23rd, 06:12 pm

இது 140 கோடி இதயத் துடிப்புகளின் திறன் மற்றும் இந்தியாவின் புதிய ஆற்றலின் நம்பிக்கையின் தருணம்

15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு

August 23rd, 03:30 pm

15-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்ததற்காகவும், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காகவும் எனது அன்பு நண்பர் அதிபர் ராமஃபோசாவுக்கு நான் மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் சந்திப்பு

August 23rd, 03:05 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 23 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவை சந்தித்தார்.

PM Modi arrives for the BRICS Summit at Johannesburg, South Africa

August 22nd, 06:08 pm

Prime Minister Narendra Modi arrived at Johannesburg in South Africa. Upon arrival at the Waterkloof Air Force Base, PM Modi was accorded a ceremonious welcome by Deputy President, Paul Mashatile of South Africa. PM Modi’s three-day visit to South Africa entails participation in the 15th BRICS Summit and engagements with leaders of BRICS and invited countries in plurilateral and bilateral settings.

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் பயணத்திற்கு முன்னதாகப் பிரதமரின் அறிக்கை

August 22nd, 06:17 am

ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் 15-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்க அதிபர் மேதகு சிரில் ரமபோசா அழைப்பின் பேரில் 2023 ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென்னாப்பிரிக்கக் குடியரசிற்கு நான் பயணம் மேற்கொள்கிறேன்.

தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு

August 03rd, 08:26 pm

தென்னாப்பிரிக்கக் அதிபர் திரு மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2023) தொலைபேசியில் உரையாடினார்.