ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு

September 03rd, 08:40 pm

ஜெர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜோஹன் வதேபுல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். “இந்தியாவும் ஜெர்மனியும் உத்திசார் கூட்டு முயற்சியின் வெள்ளி விழாவைக் கொண்டாடுகின்றன. துடிப்பான ஜனநாயகங்களாகவும், முன்னணி பொருளாதாரங்களாகவும், வர்த்தகம், தொழில்நுட்பம், புத்தாக்கம், நிலைத்தன்மை, உற்பத்தி மற்றும் இயக்கம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர நலன் பயக்கும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அபரிமிதமான சாத்திய கூறுகளை நாங்கள் காண்கிறோம்”, என்று திரு மோடி தெரிவித்தார்.